அதியுச்ச பாதுகாப்பிற்கு மத்தியில்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ரணில்
கடந்த
ஈஸ்டர் ஞாயிறு
தினத்தில் தற்கொலை
குண்டுத் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
இன்றையதினம் அவசர விஜயம் ஒன்றை மே்றகொண்டுள்ளார்.
பலத்த
பாதுகாப்பிற்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இன்று காலை
குறித்த தேவாலயத்திற்கு
சென்று நிலைமைகளை
ஆராய்ந்துள்ளார்.
இதன்போது,
அதிகளவான பொலிஸார்,
இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் ஆலய வளாகத்தில் நிறுத்தப்பட்டு
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்
அப்பகுதியில் செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு
அனுமதி வழங்கப்படவில்லை
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment