ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெறவிருந்த
திருமணம் அலரி மாளிகையில்

ஷங்கிரிலா ஹோட்டலில் அண்மையில் குண்டுவெடித்ததன் காரணமாக அலரி மாளிகையை மீண்டும் திருமண மண்டபமாக்கிய முன்னாள் அமைச்சர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
                                                                                                                                     
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாவின் மகனின் திருமணத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது மகனின் திருமணத்திற்காக ஷங்கிரிலா ஹோட்டலில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் காரணமாக குறித்த ஹோட்டலில் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் இந்த திருமண வைபவம் நடத்தப்பட்டுள்ளது.

விஜித் விஜயமுனி சொய்ஸாவின் மகன் வைத்திய மாணவரான கஜிது சொய்ஸா என்பவரே இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top