பாலங்கள் தகர்க்கப்பட உள்ளதாக வெளியான
தகவலில் உண்மையில்லை
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர



பாலங்களை குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக கிடைத்த தகவல் குறித்து விசாரணை நடத்தியதாகவும் அதில் எந்த உண்மையும் இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பாலங்கள் அமைந்திருக்கும் இடங்களில் குண்டு தாக்குதல் நடத்தப்பட போவதாக கூறும் கடிதம் ஒன்று சமூக வலைத்தங்களில் பகிரப்படும் விதத்தை கண்டோம். இந்த கடிதம் மூலம் கிடைத்த தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவது மட்டுமே நடந்தது.

கடிதத்தில் உள்ள தகவல்கள் குறித்து மேலதிக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைகளில் அந்த தகவல்களில் உண்மையில்லை என்பது உறுதியாகியது. இதனால், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top