குற்றப் புலனாய்வு
திணைக்களத்திடம்
மேலதிக விசாரணைகளுக்காக
ஒப்படைக்கப்பட்ட டாக்டர்
சந்தேகத்திற்குரிய
முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குருநாகல் மருத்துவமனை டாக்டர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்
புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ்
ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சகருமான ருவன் குணகேர இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகளினால்
பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பில், முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற
உறுப்பினர்களும் இன்று சனிக்கிழமை (25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது
இல்லத்தில் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடினர். இதன்போது பெரும்பான்மை
இனத்தவர்களின் 4000 பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு அறுவைச்சிகிச்சை
மேற்கொண்டதாக சிங்கள தினசரி பத்திரிகையொன்று வியாழக்கிழமை தலைப்புச் செய்தி
வெளியிட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில்
பணியாற்றும் முஸ்லிம் வைத்தியர் ஒருவரின் பெயர் குறிப்பிட்டு சனிக்கிழமை அதே
பத்திரிகை தலைப்புச் செய்தி பிரசுரிப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதுபற்றி
கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இவ்வாறான அறுவைச் சிகிச்சைகளை வைத்தியர் ஒருவர் தனித்துச்
செய்வதில்லை. குழுவினராகத்தான் அதனை மேற்கொள்கின்றனர் என்றார். குறித்த வைத்தியர்
பெருந்தொகைப் பணத்தை வைத்திருந்தாகக்கூறி தற்போது பொலிஸாரினால்
கைதுசெய்யப்பட்டுள்ளார். அப்படியானால், இந்த விவகாரத்தை உள்நாட்டு இறைவரித்
திணைக்களமே கையாண்டிருக்க வேண்டும் என்று பிரஸ்தாபிக்கப்பட்ட்தாகவும்
தெரிவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment