சாய்ந்தமருது மக்கள் தேசபக்தியுடையவர்கள்
-பதவி உயர்வுபெற்ற
பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவிப்பு
சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி குடியேற்ற வீடொன்றில் பதுங்கி இருந்தவர்கள்
தொடர்பில் தகவல்
வழங்கிய சாய்ந்தமருது மக்கள் தேசபக்தியுடையவர்கள்
என
பதவி உயர்வுடன் பணப் பரிசு பெறும்
பொலிஸ் உத்தியோகத்தர்
மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த
பொலிஸ்
உத்தியோகத்தர் தற்போது சார்ஜன்ட்
தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட மகிழ்ச்சியுடன்,
தனது பெற்றோர்
விவசாயம் செய்தே
தனக்கு
கல்வி கற்பித்ததாகவும் குடும்பத்தில்
இரண்டு சகோதரர்களுடன்
தான்
3 ஆவது பிள்ளை எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை,
சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கரவாதிகள் மறைந்திருந்தமை
தொடர்பில் போக்குவரத்து
பொலிஸ் அதிகாரிக்கு
தகவல் வழங்கிய
மூன்று முஸ்லிம்களுக்கும்
தலா பத்து
இலட்சம் ரூபாய்
வீதம் சன்மானம்
வழங்கப்பட்டுள்ளது.
மூன்று
சிவிலியன்கள் வழங்கிய தகவலை பொலிஸ் உயர்
அதிகாரிகளுக்கு வழங்கிய போக்குவரத்து பிரிவின் பொலிஸ்
காண்ஸ்டபிள், பொலிஸ் தலைமையகத்தின் ஆலோசனைக்கமைய சார்ஜன்டாக
தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன் ஐந்து இலட்சம்
ரூபாவையும் சன்மானமாக வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment