கல்முனை நகரில் ஹிஜ்ரா வீதிக்கு
என்ன நடந்தது கவனிப்பார்களா?

கல்முனை மாநகரம் முஸ்லிம்களுக்குரியது. இதனை எவருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என்று வாய் கிழிய கத்துகிறோம்.ஆனால் கல்முனை நகருக்குள் உள்ள எந்த ஒரு வீதிக்கும் வீதி பெயர் பலகை எதனையும் காணவில்லை.

கல்முனை பொலிஸ் நிலைய வீதி, வாடி வீட்டு வீதி, கிட்டங்கி வீதி , உடையார் வீதி, ஆர்.கே.எம் வீதி, யார்ட் வீதி, மட்டக்களப்பு வீதி, பஜார் வீதி என்பன போன்ற வீதிகள் பிரதானமாக காணப்படுகின்றன.

ஹிஜ்ரி 1400ம்வருட ஞாபகார்த்தமாக கல்முனையில் 1982ம் ஆண்டு முஸ்லிம் கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.பின்னர் அதற்கு என்ன நடந்தது என முன்னர் பதிவொன்றை இட்டேன்.

அக்காலத்தில் கல்முனை நகரில் தற்போதைய .போ..டிப்போ அமைந்துள்ள வீதிக்கு ஹிஜ்ரி 1400 ம் வருட ஞாபகமாகஹிஜ்ரா வீதி” என பெயரிடப்பட்டது.இவ்வீதி அமைக்கப்பட்டபோது ஆரம்பத்தில் கல்முனை தமிழ் மக்கள் “சேர்ச் வீதி” என பெயரிடப்பட்டது வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால் கல்முனை நகருக்குள் முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் வகையில் ஹிஜ்ரா வீதி என பெயரிடுமாறு மறைந்த பற்றிமா கல்லூரி அதிபர் மத்தியூ போன்ற நல்ல உள்ளங்கள் கேட்டதாக வீதி அமைப்பின் முன்னோடி மறைந்த அமைச்சர்.மன்சூர் என்னிடம் கூறியதை ஞாபகம் வைத்துள்ளேன்.

இவ்வீதி பின்னர் புலிகள் காலத்தில் அன்னை பூபதி வீதி எனவும் அந்தோனி வீதி எனவும் அதன் பின்னர் பாரதி வீதி எனவும் அழைக்கப்பட்டது.இந்நிலையில் தான் கல்முனை முஸ்லிம் நகரம் என கூறுகிறோம்.

வெட்கம் கல்முனை மாநகர சபையில் முஸ்லிம்கள் பெரும் பான்மை இருந்தும் ஹிஜ்ரா வீதிக்கு உரிய பெயர் பலகை இட்டு காப்பாற்ற முடியாது இருப்பது யாருடைய பலவீனம்.சற்று சுய பரிசோதனை செய்யுங்கள்.
-          ஏ.எல்.எம்.முக்தார்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top