சாய்ந்தமருது
குண்டுவெடிப்பில் உயிரிழந்த
ரில்வானின்
காத்தான்குடி வீட்டில்
தற்கொலை அங்கி கண்டுபிடிப்பு
தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் காசிமின் சகோதரரும், சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவருமான மொகமட் ரில்வானின் வீட்டில் இருந்து தற்கொலை தாக்குதலுக்கான அங்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
காத்தான்குடியில்
உள்ள இந்த
வீட்டில் சோதனை
நடத்தப்பட்ட போது அங்கு தங்கியிருந்த ரில்வானின்
மனைவியின் தாயும்,
தந்தையும் கைது
செய்யப்பட்டனர்.
இங்கிருந்து,
தற்கொலை தாக்குதலுக்கு
பயன்படுத்தப்படும் அங்கி, இரண்டு
அலைபேசிகள், வங்கி அட்டைகள், வங்கி கணக்குப்
புத்தகங்கள், ரில்வானின் அடையாள அட்டை மற்றும்
படங்கள் பலரும்
கைப்பற்றப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment