பரபரப்பான சூழ்நிலையில் இலங்கைக்கு
நாடு கடத்தப்பட்ட
மாகந்துரே மதுஷ்!
கட்டுநாயக்கவில் காத்திருந்து பிடித்த
குற்ற புலனாய்வு
அதிகாரிகள்
பிரபல
போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழு
தலைவருமான மாகந்துரே
மதுஷ் நாடு
கடத்தப்பட்டுள்ளார்.
டுபாய்
பொலிஸ் அதிகாரிகளினால்
கைது செய்யப்பட்டிருந்த
நிலையில் இன்று
அதிகாலை இலங்கைக்கு
நாடு கடத்தப்பட்டுள்ளார்.
மதுஷை
நாடு கடத்துவதில்
டுபாய் பாதுகாப்பு
துறையில் குழப்ப
நிலை ஏற்பட்டிருந்தது.
தன்னை
நாடு கடத்த
வேண்டாம் என
மதுஷ் தாக்கல்
செய்த மனு
மீதான தீர்ப்பு
எதிர்வரும் 9ஆம் திகதி அறிவிக்கப்படும் என
டுபாய் நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்தது. எனினும் இன்று
அதிகாலை வேளையில்
அவர் இலங்கைக்கு
நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு
அனுப்பப்பட்ட மதுஷ் கட்டுநாயக்க விமான நிலைத்தில்
வைத்து கைது
செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குற்ற
விசாரணை திணைக்கள
அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த
சில மாதங்களுக்கு
முன்னர் டுபாய்
நடந்த விருந்து
ஒன்றில் மதுஷ்
மற்றும் அவர்களது
கூட்டாளிகளை கலந்து கொண்ட நிலையில், அந்நாட்டு
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள்
பயன்பாடு காரணமாக
இவர் கைது
செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment