இலங்கையின் பல இடங்களை அழிக்க
.எஸ் பயங்கரவாதிகள் முயற்சி!
விசாரணையில் வெளியான பல தகவல்கள்

.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கையின் பல்வேறு இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அது தோல்வியில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத குழு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அன்றைய தினம் நடத்தப்படவிருந்த மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்து மோதலானது, தாக்குதல் நடத்தப்பட்ட நாளுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இடம்பெற்றுள்ளதாக, கைது செய்யப்பட்டுள்ள முக்கிய சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இதன் காரணமாகவே பயங்கரவாத அமைப்பின் தலைவர் சஹ்ரானும் நேரடியாக தற்கொலை தாக்குதல் நடத்த தீர்மானித்துள்ளார்.

பிரதான சூத்திரதாரி சஹ்ரானுக்கு எதிராகக் குரலெழுப்பியவர்கள் தங்களுக்கான வேறு தலைவரொன்றை நியமித்துக்கொண்டு, வேறொரு பள்ளிவாசலுக்கு சென்றுள்ளனர். இதனாலேயே, தாக்குதல்கள் பல நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை பிரதேசத்திலுள்ள பாதணி விற்பனை நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும், சஹ்ரானுக்கு எதிரான கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டபடி தற்கொலை தாக்குதல்களை நடத்தியிருந்தால், உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்திருக்கும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 21ம் திகதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 255 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top