கல்முனை நகரில் முஸ்லிம் பாடசாலை
அமைவுறாததன் மர்மம் என்ன?



கல்முனை நகரில் தமிழ் பாடசாலை, சிங்கள பாடசாலை, கிறிஸ்தவ பாடசாலை என்பன உண்டு. இபடியான நிலையில் முஸ்லிம்களுக்கு தனியான பாடசாலை ஒன்று கல்முனை நகரில்  இல்லை அதனை கல்முனையில் ஏற்படுத்த வேண்டும் என சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சர்.மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் அமைச்சராக இருந்த போது கல்முனை வலய கல்வி பணிப்பாளராக இஸ்ஸதீன் சேர் இருந்தார். அவரும் தலைவர் அஷ்ரப் அவர்களும் அரசியலுக்கு அப்பால் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு நன்கு தெரியும்.

ஒரு முறை அஷ்ரப் அவர்களுடன் இஸ்ஸதீன் சேர் உரையாடிக் கொண்டிருந்த போது நானும் கூட இருந்தேன்.கல்முனை நகரில் முஸ்லிம் பாடசாலை அவசியம் என்ற விடயத்தை அவருக்கு சுட்டிக் காட்டி அதற்கு பொருத்தமான இடமாக தற்போது கல்முனை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அமைந்துள்ள இடமும் அவரிடம் இனம் காட்டப்டப்பட்டது.

இனம் காட்டப்பட்ட காணியானது ஹிஜ்ரி 1400 வது வருட ஞாபகமாக முஸ்லிம் கலாசார நிலையத்திற்கு மறைந்த அமைச்சர் எம்.எச்.முஹம்மது அவர்களால் 1982 ம் ஆண்டு அடிக்கல் நடப்பட்ட இடமாகும்.

ஆயினும் கலாசார நிலையம் கட்டப்படவில்லை.அமைச்சர் அஷ்ரப் அவர்களிடம் முஸ்லிம் கலாசார நிலையத்துடன் கூடியதாக பாடசாலை அமைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.

அவ்வேளையில் அமைச்சர் அஷ்ரப் புனர்வாழ்வு அமைச்சராக இருந்தார்.பணப்புழக்கம் மிகவும் தாராளமாக இருந்தது.ஆயினும் அஷ்ரப் அவர்கள் கல்முனை நகரில் முஸ்லிம் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு எந்த அக்கறையும் காட்டவில்லை.

அக்காணியை கல்வி அலுவலகம் அமைப்பதற்காவது பெற்றுத் தாருங்கள் என அஷ்ரப் அவர்களிடம் கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை.அல்லது திட்டமிடப்பட்ட முஸ்லிம் கலாசார நிலலயத்தையாவது கட்டலாம் என்றோம் அதுவும் நிறைவேறவில்லை. இது விடயத்தில் தலைவர் அஷ்ரப் ஏன் அக்கறை செலுத்தவில்லை என்பது என்னை இன்று வரை உறுத்துகிறது.
-          ஏ.எல். முஹம்மத் முக்தார்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top