தற்கொலை குண்டுதாரியின் உறவினர்களை
சந்திக்க சென்றேனா?
விளக்கம் சொல்லும் மன்சூர் எம்.பி
தற்கொலை
குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் மனைவி மற்றும்
மகளை அரசியல்வாதி
ஒருவர் பார்வையிட
சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த
நிலையில் இது
தொடர்பில் நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர்
விளக்கியுள்ளார்.
சம்மாந்துறை
அலுவலகத்தில் நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர்கள்
சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை
தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது
அவர் கூறுகையில்,
கடந்த
21ஆம் திகதி
இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில்
காயமடைந்த சாய்ந்தமருது
மக்களின் நலனை
அறிவதற்காக அம்பாறை வைத்தியசாலைக்கு நான் சென்றிருந்தேன்.
எனினும்
தற்கொலை குண்டுத்தாக்குதலை
நடாத்தியதாக கூறப்படும் ஸஹ்ரானின் மனைவியும், மகளும்
அதே வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று
வருவதை நான்
அறிந்திருக்கவில்லை என்பதை தெளிவாக
கூற விரும்புகின்றேன்.
இதனை
சில ஊடகங்கள்
நான் குண்டுதாரியின்
மனை மற்றும்
மகளை பார்க்க
சென்றதாக தெரிவித்து
செய்திகளை வெளியிடுகின்றன.
அதற்காக நான்
சட்ட நடவடிக்கை
மேற்கொள்ள தயாராக
உள்ளேன்.
இதேவேளை
இன்னொரு விடயம்
என்னவெனில் சம்மாந்துறையில் சந்தேகத்தின்
பேரில் கைது
செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள எனது
சாரதியின் விடுதலை
தொடர்பில் நான்
எவ்வித அழுத்தங்களையும்
பொலிஸாருக்கு கொடுக்கவில்லை.
எனது
சாரதி சந்தேகத்தின்
அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். எனவே சட்டம்
அதன் கடமையைச்
செய்யப்பட்டும். சாரதி நிராபதி என உறுதிப்படுத்தப்பட்டால்
அவர் விடுதலை
செய்யப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்
தற்கொலை குண்டுத்தாக்குதலின்
சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி மற்றும் மகள்
அம்பாறை வைத்திசாலையில்
சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
0 comments:
Post a Comment