அபுதாபி லாட்டரி குலுக்கலில் இந்தியருக்கு
ஒன்றரை கோடி திர்ஹம் பரிசு
மற்றொரு இந்தியருக்கு ஆறுதல் பரிசாக  BMW  கார்

  
அபுதாபி லாட்டரி குலுக்கலில் ஒன்றரை கோடி திர்ஹம் பரிசுப் பணம் கிடைத்தது தெரியாமல் தொலைபேசி அழைப்புகளை கவனிக்காமல் இருக்கும் இந்தியரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த கே.எஸ்.ஷோஜித் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் பணியாற்றியவாறு இங்கு வசித்து வருகிறார், அபுதாபி விமான நிலையத்தில் உள்ள லாட்டரி சீட்டு விற்பனை மையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் திகதி இவர் வாங்கிய ஒரு லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு தொகையான ஒன்றரை கோடி திர்ஹம் (இந்திய மதிப்புக்கு 28 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய்) நேற்றைய குலுக்கலில் விழுந்துள்ளது.

ஆனால், அவருக்கு இந்த பரிசு விழுந்த விபரம் இன்றுவரை தெரியவில்லை. லாட்டரி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கைபேசி மூலம் தொடர்பு கொண்டதற்கும் ஷோஜித் பதிலளிக்கவில்லை.

இருப்பினும், அவர் ஷார்ஜாவில் எங்கு வசிக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். வீட்டை கண்டுபிடித்து விஷயத்தை தெரியப்படுத்தி விடுவோம் என்கிறார் இந்த லாட்டரி குலுக்கலை நடத்தும் ரிச்சர்ட் என்பவர்.

இதே குலுக்கலில் மற்றொரு இந்தியருக்கு ஆறுதல் பரிசாக ஒரு  BMW 220i கார் மற்றும் மேலும் 8 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கும் ஆறுதல் பரிசுகள் கிடைத்துள்ளன.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top