விவசாயிகளின் ஓய்வூதிய  கொடுப்பனவு
 - இன்று தபால் அலுவலகங்களில் வழங்க ஏற்பாடு



விவசாயிகளின் ஓய்வூதிய சம்பள கொடுப்பனவு இன்றைய (6) தினம் அனைத்து தபால் அலுவலகங்களில் வழங்கப்படவிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக விடுத்துள்ள அறிவிப்பு பின்வருமாறு:

 2020.04.05

பணிப்பாளர் செய்தி,
செய்தி ஆசிரியர்

விவசாயிகளின் ஓய்வூதிய சம்பளத்தை செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு
நாளைய தினம் (06) விவசாயிகளின் ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கான பணிகள் தொடர்பில் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பு கீழ்வருமாறு:

'விவசாயிகளின் ஓய்வூதிய சம்பளத்தை செலுத்தும் பணிகளை நாளைய தினம் அனைத்து தபால் அலுவலகங்களில் மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்பொழுது சில ஊடகங்கள் மூலம் சரியான செய்தி வெளியிடப்படவில்லை. கிராம உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆய்வு உற்பத்தி உதவி அதிகாரிகள் மூலம் வீடுகளுக்கே விவசாய ஓய்வூதிய சம்பளம் எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்படும் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வாறானவை இடம்பெறாது. நாளைய தினம் தபால் அலுவலகங்களில் இந்த கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் விவசாய ஆய்வு உற்பத்தி உதவியாளர்கள் இந்த விவசாயிகளை தபால் அலுவலகத்தில் ஈடுபடுத்துவதற்காக தேவையான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக , நாளைய தினம் ஐயாயிரம் ரூபா (5000 ரூபா) கொடுப்பனவை தபால் அலுவலகம் மூலம் செலுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.' என்று தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை உரிய வகையில் விளம்பரப்படுத்துமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நாலக கலுவேவ
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top