சாய்ந்தமருது
ஜும்ஆப் பள்ளிவாசல்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் 1691 ஆண்டளவில் மட்டக்களப்பு கச்சேரியில் அன்று அறவீட்டு கணக்கராக கடமைபுரிந்த சதக்குலெவ்வை என்பவரினால் பரிபாலிக்கப் பட்டு வந்துள்ளதாக இதன் ஆரம்ப வரலாறுகள் தெரிவிக்கின்றன.

1870 ஆம் ஆண்டில் இப்பள்ளிவாசலின் பிரதம மரைக்காயராக இருந்த மீரா லெப்பை போடி வன்னியனார் காலத்தில் சுமார் ஆயிரம் பேர் தொழக் கூடிய இடவசதியுள்ள பள்ளிவாசலாக மாற்றம் பெற்றது.

1961ஆம் ஆண்டில் பிரதம மரைக்காயராக இருந்த மு.அ.அப்துல் கபூர் மரைக்காயர் காலத்தில் பள்ளிவாசலின் முன் பக்கத்தில் மண்டபம் ஒன்று கட்டப்பட்டு முகப்பு வேலைகளும் செய்யப்பட்டது.

தற்போது காட்சி தரும் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் 1985 ஆம் ஆண்டு சுமார் 5ஆயிரம் பேர் தொழக் கூடியதாக அமைப்பதற்கு பிரதம மரைக்காயராக அன்று இருந்த மர்ஹும் எம்.ஐ.எம்.மீராலெவ்வை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பள்ளிவாசல் 2003 ஆம் ஆண்டு பிரதம மரைக்காயராக இருந்த மர்ஹும் ஐ.எம்.முஹைதீன் மரைக்காயர் காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டது.

இப்பள்ளிவாசலின் காரியாலய வேலைகள் யாவும் ஆரம்ப காலத்தில் பள்ளிவாசல் தலைவர் அல்லது செயலாளரினால் அவர்களின் வீட்டிலேயே செய்யப்பட்டு வந்தன.

பின்னர் 1930 ஆண்டுகளில் கட்டப்பட்ட கடைத்தொகுதியில் ஒரு அறையில் பள்ளிவாசல் காரியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. (இங்குள்ள படங்களில் அந்த காரியாலயத்தை காணலாம்)

இக் காரியாலயத்தில் 1941 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டு கடைசி வரை கணக்குப் பிள்ளையாக மர்ஹும் க.லெ.முஹம்மது காஸீம் அவர்கள் அரும் பணியாற்றினார்.

தமக்கு கிடைத்த உள்ளூராட்சி மன்ற இலிகிதர் வேலையை (ஓய்வூதியம் பெறும் தொழில்) பள்ளிவாசல் கடமைக்காக தியாகம் செய்து விட்டே இக் கடமைக்காக அவர் வந்தார்.

இவர் தனது 86 ஆவது வயதில் (2000.11.24) வபாத்தானார்.

2001 ஆம் ஆண்டு பழைய பள்ளிவாசலின் அந்த காரியாலயக் கட்டடம் அகற்றப்பட்டது.

2006 ஆம் ஆண்டு பிரதம நம்பிக்கையாளராக இருந்த டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் வழிகாட்டலில் அன்று உப செயலாளராக இருந்த ஐ.எல்.உதுமான்கண்டு மரைக்காயரின் மேற்பார்வையில் தற்போது உள்ள காரியாலயம். அமைக்கப்பட்டது.

பழைய பள்ளிவாசலின் குர்ஆன் மத்ரஸாவுக்கு முன் நிற்பவர் இப் பள்ளிவாசலில் இமாமாகவும் குர்ஆன் மத்ரஸாவின் ஹஸ்ரத் தாகவும் கடமை செய்த கட்டலெவ்வை என்று செல்லமாக அழைக்கப்பட்ட எம்.எஸ்.அபூபக்கர் லெவ்வை அவர்களாகும்.

இப்படங்களில்,
*பள்ளிவாசலின் தற்போதைய தோற்றம்.

*பழைய பள்ளிவாசலின் உள், வெளித்தோற்றங்கள் (1870-1985).

* பழைய பள்ளிவாசலின் குர்ஆன் மத்ரசா.

* பழைய பள்ளிவாசலின் காரியாலயம்.

ஏ.எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top