இரண்டு வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்க மாட்டார்களாம் 

பொதுபலசேனா அதிரடியாக தெரிவிப்பு

இரண்டு வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுபலசேனா அதிரடியாக தெரிவித்துள்ளது.     அதன்படி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. அதற்கு மைத்திரிபாலவுடன் இணைந்து கொண்டுள்ள நபர்களின் கடந்த கால மற்றும் தற்கால நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.     மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செயற்பட்டுள்ளார்.எனவே மைத்திரிபால சிறிசேனவை நம்ப முடியாது என பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது.    

இதேவேளை பொதுவேட்பாளர் மைத்திரபால சிறிசேனாவிற்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கும் நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுபலசேனா  தெரிவித்துள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top