சவூதி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
11 பேர் பலி, 219 பேர் காயம்
சவூதிஅரேபியாவின்
கோபார் நகரில்
அராம்கோ எண்ணெய்
நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில்
ஏற்பட்ட தீ
விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 219 பேர் காயமடைந்தனர்.
சவூதியின் கிழக்கு
நகரான கோபாரில்
உலகிலேயே மிகப்
பெரிய ஆயில்
நிறுவனமான சவூதி அராம்கோ
செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கச்சா
எண்ணெய் உற்பத்தி
செய்து வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி செய்து
வருகிறது. இதில்
77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள்
வேலைப்பார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கென
தனியாக தங்கும்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடி
குடியிருப்பு கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென
தீ விபத்து
ஏற்பட்டது. தீ மளமளவென மேல்மாடிக்கும் பரவியது.
தீ விபத்து
ஏற்பட்டதும் அங்கு தங்கியிருந்தவர்கள் உயிரை கையில்
பிடித்தவாறு வெளியில் ஓடினார். ஆனாலும், தீயில்
கருதி 11 பேர்
பரிதாபமாக உயிரிழந்தனர்.
219 காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment