இந்தியாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரிவிப்பு
கடந்த
2011ஆம் ஆண்டு
இந்தியாவில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து, ஹிந்துக்களின்
எண்ணிக்கை குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு திணைக்களத்தின் -தலைமைப் பதிவாளர்
வெளியிட்ட அறிக்கையில்
கூறியுள்ளதாவது:
கடந்த
2011ஆம் ஆண்டு
இந்தியா முழுவதும்
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி நாட்டின்
மொத்த மக்கள்தொகை
எண்ணிக்கை 121.09 கோடியாகும்.
அதில் மக்கள்தொகையின் சமூக,
பொருளாதார ரீதியிலான
எண்ணிக்கை கடந்த
ஜூன் 3ஆம்
திகதி
வெளியிடப்பட்டது. அப்போது மதவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
வெளிடப்படவில்லை.
தற்போது
மதவாரியான மக்கள்தொகைக்
கணக்கெடுப்பு கணக்கிடப்பட்டு வெளியிடப்படுகிறது.
அதன்படி
இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஹிந்துக்களின்
எண்ணிக்கை குறைந்துள்ளது தெரியவந்திருக்கிறது.
கடந்த
2011ஆம் ஆண்டு
எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி,
ஹிந்துக்களின்
எண்ணிக்கை 96.63 கோடி (79.8 சதவீதம்)
முஸ்லிம்களின்
எண்ணிக்கை 17.22 கோடி ( 14.2 சதவீதம்)
கிறிஸ்தவர்கள்
2.78 கோடி ( 2.3 சதவீதம்)
சீக்கியர்கள்
2.08 கோடி (1.7 சதவீதம்)
பெளத்தர்கள் 84 லட்சம் (0.7 சதவீதம்)
ஜைனர்கள்
45 லட்சம் (0.4 சதவீதம்)
பிறர்
79 லட்சம் (0.7 சதவீதம்)
மதத்தை
குறிப்பிடாதவர்கள் 29 லட்சம் (0.2 சதவீதம்) பேர் உள்ளனர்.
கடந்த
2001ஆம் ஆண்டு
எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு
ஒப்பிடுகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை
2011ஆம் ஆண்டு
0.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹிந்துக்களின்
எண்ணிக்கை 0.7 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் சீக்கியர்கள்,
பெளத்தர்கள்
எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கிறிஸ்தவர்கள்
மற்றும் ஜைனர்கள்
எண்ணிக்கையில் மாற்றமில்லை.
இதே காலகட்டத்தில் ஹிந்துக்களின்
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 17.7 சதவீதமும், முஸ்லிம்களின்
வளர்ச்சி விகிதம்
24.6 சதவீதமும் உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment