இசை அமைப்பாளர் இளையராஜா
மருத்துவமனையில் அனுமதி

இசை அமைப்பாளர் இளையராஜா (வயது72) நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
இளையராஜாவுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மார்பில் வலியுடன் அசௌகரிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை அப்பலோ மருத்துவமனையில் சேர்த்தனர். இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை அனுமதித்து, ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது நலமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு இருதய சிகிச்சை மீண்டும் தேவையா என்பது குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top