15
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஐ.தே.கட்சியில் 13, ஐ.சு.கூட்டமைப்பில் 1, மு.காங்கிரஸில் 1
கடந்த 2015.08.17 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மக்களின்
வாக்குகளால் 15 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு
செய்யப்படடிருக்கிறார்கள்.
தெரிவு செய்யப்பட்டிருக்கும் 15 உறுப்பினர்களில் காதர் மஸ்தான் ஹாஜீ மாத்திரமே ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக தெரிவு செய்யப்பட்டவராகும்.
அலிசாஹிர் மெளலானா சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
ஏனைய 13 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்
கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களாகும். இவர்களில் ரவூப்
ஹக்கீம், முஹம்மது காசீம் முஹம்மத் பைசல், ஹபீப் முஹம்மத் மொஹம்மட் ஹரீஸ், இப்றாஹிம் முஹம்மது மன்சூர் ஆகியோர் சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவும்
ரிஷாத் பதியுதீன், எம்.எஸ்.எஸ்.அமீரலி, எம்.எஸ். முகமட் மஃறூப், அப்துல் ரஹ்மான் இஸ்ஹாக் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும்
ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டிருந்தனர்.
தேசியப் பட்டியல் மூலமும் இன்னும் முஸ்லிம்களில் சிலர்
நியமிக்கப்படவிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெரிவு செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும்
அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும்,
ரவூப் ஹக்கீம்- 102186
அப்துல் ஹலீம் - 111011
ரிஷாத் பதியுதீன்- 26291
கபீர் காசீம்- 100930
எஸ்.எம்.மரிக்கார்– 92,526
முபுர்ரஹ்மான்– 83,884
இப்றாஹிம் முஹம்மது
முஹம்மது மன்சூர் - 58536
முஹம்மது காசீம் முஹம்மத்
பைசல் -
61401
ஹபீப் முஹம்மத்
மொஹம்மட் ஹரீஸ் - 59433
அலிசாஹிர்
மெளலானா 16,385
எம்.எஸ்.எஸ்.அமீரலி 16,611
எம்.எஸ்.
முகமட் மஃறூப்
35456
இம்ரான் மஃறூப் 32582
அப்துல் ரஹ்மான் இஸ்ஹாக் -44,626
காதர் மஸ்தான் ஹாஜீ 7298
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.