அம்­பா­றையில் இரு ஆச­னங்கள் கிடைத்தால்
கரை­யோர மாவட்டம் பெற்றுத் தரப்­படும்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன்




இம்­முறை நடை­பெ­­வுள்ள தேர்­தலில் எமது அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சிக்கு அம்­பாறை மாவட்ட மக்கள் வாக்­­ளித்து இரண்டு ஆச­னங்­களைப் பெற்றுக் கொடுத்தால் இம்­மா­வட்ட முஸ்­லிம்­களின் நீண்­­காலத் தேவை­யாகப் பார்க்­கப்­­டு­கின்ற கரை­யோர மாவட்டம் நிச்­சயம் பெற்றுத் தரப்­படும். பிர­தமர் ரணில் விக்கி­­­சிங்க பத­வி­யேற்று கரை­யோர மாவட்டம் பிர­­­னப்­­டுத்­தப்­பட்ட பின்பே நானும் எனது கட்­சி­யி­னரும் அமைச்சுப் பொறுப்­பினை ஏற்றுக் கொள்வோம். இல்­லையேல் நாம் எதிர்க்­கட்சி ஆச­னத்தில் அமர்ந்து கொள்வோம் என வன்னி மாவட்ட வேட்­பா­ளரும் அமைச்­­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.
அம்­பாறை மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸில் போட்­டி­யிடும் தென்­கி­ழக்குப் பல்­கலைக் கழ­கத்தின் முன்னாள் உப­வேந்தர் கலா­நிதி எஸ்.எம்.எம்.இஸ்­மா­யி­லினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஊட­­வி­­லாளர் சந்­திப்பு நேற்­று­ முன்­தினம் சம்­மாந்­து­றையில் இடம்­பெற்­றது. இதன்­போது கருத்துத் தெரி­விக்­கும்­போதே அமைச்சர் மேற்­கண்­­வாறு தெரி­வித்தார்.
இதன்­போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரி­விக்­கையில், அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்­களின் நீண்ட காலத் தேவை­யாக கரை­யோர மாவட்டக் கோரிக்கை இருந்து வரு­கின்­றது. தேர்தல் காலத்தில் மாத்­திரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­மை­யினால் இவ்­வி­டயம் பெரிது படுத்­தப்­படும்.
ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் இது­பற்றி யாருமே பேசாமல் மௌனி­­ளாகி விடுவர். அம்­பாறை மாவட்­டத்தின் நிர்வாகம் பெரும்­பாலும் பெரும்­பான்மைச் சமூ­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதாலேயே இப்­பி­ராந்­திய மக்கள் கரை­யோர மாவட்­டத்தை பெற்றுத் தரு­மாறு கோரு­கின்­றனர்.
கடந்த முப்­பது வரு­டங்­­ளுக்கு முன்னர் நமது முஸ்லிம் மக்­­ளுக்­கா­­வற்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பெருந்­­லைவர் மர்ஹூம் அஷ்ரப்பினால் உரு­வாக்கம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை கடந்த பதி­னைந்து வரு­டங்­­ளான கையி­லெ­டுத்துக் கொண்ட அதன் தலைவர் சந்­தர்ப்­­வாத அர­சியல் செய்து கொண்டு மக்­களை ஏமாற்றி வரு­கின்றார்.
தேர்தல் காலத்தில் மாத்­திரம் மக்­களை உணர்ச்­சி­­சப்­­டுத்தும் வகையில் சில கோஷங்­களைப் போடுவார். பின்னர் அவ்­வி­­யங்கள் பற்றி எது­வுமே பேச­மாட்டார். ரவூப் ஹக்­கீ­மினால் எந்­­வொரு இலா­பமோ பயனோ இல்லை.
அம்­பாறை மாவட்­டத்­திற்கு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பல கோடி ரூபா பணத்­தினை ஒதுக்­கீடு செய்து அபி­வி­ருத்தி செய்ய நான் முற்­பட்­­போ­தெல்லாம் இங்­குள்ள முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட சிலர் இம்­மா­வட்டம் எமது கட்­டுப்­பாட்­டுக்குள் உள்­ளது.
இங்­குள்ள மக்கள் எம்மை மாத்­தி­ரமே ஆத­ரிக்­கின்­றார்கள் என்று நமது சமூ­கத்­திற்­காக நான் கொண்டு வந்த அபி­வி­ருத்­தி­களை ஓரங்­கட்­டினர்.
மரு­­முனைப் பிர­தே­சத்தில் நெசவு கைத்­தொ­ழி­லா­ளர்கள் செறிந்து வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­­ளது தொழிலை விருத்தி செய்யும் வகையில் நூல்­­ளுக்கு நிற­மூட்டும் நிலை­யத்­தினை நிறு­வு­­தற்­காக 8 கோடி ரூபா பணத்­தினை வழங்­கி­யி­ருந்தேன்.
ஆனால் அதனை இங்­குள்­­வர்­களின் அர­சியல் தலை­யீட்டினால் நிறுவ முடி­­வில்லை. அதனை பேரி­­வாத அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் அம்­பா­றைக்கு தரு­மாறு கேட்டுக் கொண்­டி­ருந்­ததால் நமது சமூகம் பயன்­பெ­றட்டும் என்ற நோக்கில் அந்­நி­லை­யத்­தினை காத்­தான்­குடி பிர­தே­சத்­திற்கு வழங்க வேண்டி ஏற்­பட்­டது.
நமது மக்­­ளுக்கு நல்­லது செய்ய எத்­­னிக்­கின்­­போது சுய­நல அர­சி­­லுக்­காக எமது அபி­வி­ருத்­தி­களை ஒதுக்கி விடு­வது நல்ல விட­­மல்ல.
அத­னால்தான் இம்­முறை அம்­பாறை மாவட்ட மக்கள் ஒற்­று­மைப்­பட்டு எமது கட்­சிக்கு வாக்­­ளித்து இரண்டு ஆச­னங்­களைப் பெற்றுக் கொடுத்தால் இம்­மா­வட்ட மக்­களின் கரை­யோர மாவட்­டத்­திற்­கான கனவு நிச்­சயம் நிறை­வேற்றித் தரப்­­­வுள்­­தோடு இம்­மா­வட்­டத்தின் தேவைகள் அனைத்­தையும் நிவர்த்தி செய்ய திட்­­மிட்­டுள்ளோம்.
இம்­முறை நடை­பெ­­வுள்ள தேர்தல் மூலம் எமது கட்சி அதி­கப்­­டி­யான ஆச­னங்­களைக் கைப்­பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்­கத்தின் அடிப்­­டை­யி­லேயே நாம் சில பிர­தே­சங்­களில் தனித்தும் சில பிர­தே­சங்­களில் இணைந்தும் போட்­டி­யி­டு­கின்றோம்.
யாரையும் தோல்­வி­­டையச் செய்ய வேண்டும் என்றோ அல்­லது யாரையும் அர­சி­­லி­லி­ருந்து ஓரங்­கட்ட வேண்டும் என்ற நோக்­கத்­திலோ நாம் தேர்­தலில் இறங்­­வில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சிக்­கா­ரர்கள் நினைப்­பது போன்று மட்­டக்­­ளப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலியை வீழ்த்தும் வகையில் நாம் கீழ்த்­தர அர­சியல் செய்­­வில்லை.
இம்­முறை நாம் எமது கட்­சி­யினை சில மாவட்­டங்­­ளுக்கு விஸ்­­ரித்­தி­ருக்­கின்றோம் அந்த வகையில் நாம் எட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வென்­றெ­டுப்­­தற்­கான சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது. அத்­தோடு எமக்­காக இரண்டு போனஸ் ஆச­னங்கள் வழங்­குவ­தற்­காக வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றாக கிடைக்கும் பத்து ஆச­னங்­களைக் கொண்டு நமது மக்­­ளுக்கு பாரிய சேவை செய்ய திட்­­மிட்­டுள்ளோம். இந்­நாட்­டி­லுள்ள ஏனைய மதத்­­வர்கள் மத ரீதி­யி­லான அடிப்­­டை­யினைக் கொண்டு சமூக நல அமைப்­பு­களை ஏற்­­டுத்தி சிறந்த கட்­­மைப்­புடன் இவ்­வினம் சார்ந்த மக்­­ளுக்கு பாரிய நன்­மை­களைச் செய்து வரு­கின்­றார்கள்.
ஆனால் இலங்­கையில் உள்ள முஸ்­லிம்­­ளுக்­கென்று ஒரு திட்­­மி­டப்­பட்ட அமைப்போ கட்­­மைப்போ இல்லை. நமது முஸ்­லிம்­­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சிக்­கா­ரர்­­ளுக்கு இவ்­வி­டயம் பற்றி எந்த அக்­­றையும் இல்லை.
ஆனால் எமது கட்சி இந்­நாட்­டி­லுள்ள அனைத்துத் தரப்பு முஸ்லிம் முக்­கி­யஸ்­தர்­களை ஒன்று சேர்த்து சமூக பொரு­ளா­தார கல்வி அபிவிருத்தி உள்­ளிட்ட ஐந்து துறை­களை தரப்­­டுத்தி அர­சியல் செய்­­துடன் சமூகப் பணி­­ளையும் மேற்­கொள்­­வுள்ளோம். இந்த நாட்டில் நீண்ட கால­மாக நிலை­கொண்­டி­ருந்த யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­தவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் . அவர் செய்த அந்த நன்­மை­யான காரி­யங்­­ளுக்­காக அவர் பக்கம் நின்றோம்.
அவர் நமது சமூ­கத்­திற்கு துரோகம் செய்ய முற்­பட்­­போது அவரை உத­றித்­தள்ளி எறிந்து விட்டு வெளி­யேறி வந்தோம். அண்­மையில் எமது முஸ்லிம் அக­தி­­ளுக்கு பாரிய அபி­வி­ருத்­தி­களைச் செய்து தந்த பஷில் ராஜ­பக் சுக­வீ­­முற்று வைத்­தி­­சா­லையில் இருந்­­போது நானும் சில முஸ்லிம் முக்­கி­யஸ்­தர்­களும் சென்று சுகம் விசா­ரித்தோம்.
எமது சமூ­கத்­திற்கு நன்­மைகள் செய்து தந்த நன்­றிக்­­­னுக்­காக அவரை வைத்­திய­சா­லைக்கு பார்க்கச் சென்­றேனே தவிர சிலர் சொல்­வது போல் எனக்கு அவரை சந்­திப்­­தற்கு வேறெந்த தனிப்­பட்ட நோக்­­மு­மல்ல. எமது இஸ்லாம் மார்க்கம் பண்­பான மார்க்­­மாகும்.
அந்த மார்க்கம் போதித்­­தற்­­மை­வாக நோயா­ளியைப் பார்ப்­பதும் உத­விக்கு நன்றி செலுத்­து­வதும் குற்­­மான செய­லன்று. அவர் செய்த நன்­மை­களை நாம் வர­வேற்­­துடன் துரோ­கத்­­னத்­திற்கு எதிர்ப்­பி­னையும் நாம் தெரி­வித்­தி­ருக்­கின்றோம்.
இரு­­தா­வது திருத்தச் சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­­டு­வது எமது சிறு­பான்மைச் சமூ­கத்­திற்கு பாரிய இழப்­பாக அமைந்து விடும்.
இந்த இரு­­தா­வது திருத்தச் சட்­டத்­தினை கொண்­டு ­­ரு­­தற்கு பெரும்­பான்மைக் கட்­சிகள் பெரிதும் விருப்பம் கொண்­டுள்­ளன. குறிப்­பாக பெரும்­பான்மைக் கட்­சி­களில் இருக்­கின்ற பேரி­­வாத கொள்கை கொண்­­வர்கள் ஆட்சி அமைப்­­தற்­காக சிறு­பான்மைக் கட்­சி­களின் தேவை இல்­லாமல் செய்­­தற்­காக முயற்­சிக்­கின்­றனர்.
தற்போது நாட்டிலுள்ள தேர்தல் முறைதான் சிறுபான்மைச் சமூகத்திற்கு உகந்த தேர்தல் முறையாகும். இத்தேர்தல் முறை மாறாமல் இருப்பதற்கு சிறுபான்மைச் சமூகத்தினர் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
நாம் இலங்கையில் சுமார் பத்து சதவீதம் உள்ளோம். அதற்கமைவாக பாராளுமன்றத்தில் சுமார் 23 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதற்காக எதிர்காலத்தில் நமது மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ள நமது முஸ்லிம்கள் எந்தக் கட்சியில் இருந்த போதிலும் முதலில் நாட்டு முஸ்லிம் வாக்காளர்கள் முதற் தெரிவாக முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வாக்களித்து கூடுதலான பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றடுக்க ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் என்றார்.

நன்றி; வீரகேசரி


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top