அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர்
வை.எல்.எஸ். ஹமீட் கட்சியிலிருந்து நீக்கம்

பதில் செயலாளராக சாஜஹான்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சியின் தலைமைக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டதன் காரணத்தினாலேயே வை.எல்.எஸ். ஹமீட் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை வை.எல்.எஸ். ஹமீட் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மற்றும் சுமைதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
" தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான அனுமதியினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமது கட்சிக்கு வழங்கியிருந்தார். அதன்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எம்.எச்.எம்.நவவி தெரிவு செய்யப்பட்டார்.
அதே வேளை தேசிய பட்டியிலில் முதலாவதாக எம்.ஜெமீலின் பெயரே பரிந்துரைக்கபட்டிருந்த நிலையில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தின் அவசியம் கருதி அதனை ஜெமீல், எம்.எச்.எம்.நவவிக்கு வழங்க விருப்பம் தெரிவித்தமை ஒரு முன்மாதிரியான அரசியல் கலாசாரத்தின் அடித்தளமாகும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் செயலாளராக சாஜஹான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்பிக்களான நவவி ஹாஜியார் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று அமீரலி எம்பி மட்க்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் இந்த நியமனங்களை இன்று அறிவித்துள்ளார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top