பணத்துக்கு ஆசைப்பட்டு கட்சி மாறியிருந்தால்
அல்லாஹ் என்னை தண்டிப்பான்

-சாய்ந்தமருது பிரச்சாரக் கூட்டத்தில் ஏ.எம். ஜெமீல்


கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்சியில் இருந்து விலகியதாக சிலர் எனக்கெதிராக அவதூறாகக்  கூறிவருகின்றனர். அப்படி நான் பணத்துக்காக கட்சி மாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசிய அமைப்பாளரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பொலிவேரியன் திறந்த வெளியரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 ஆம் இலக்க வேட்பாளரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான  சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்திலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ஏ.எம்.ஜெமீல் தொடர்ந்து பேசுகையில் மேலும் இக்கூட்டத்தில் தெரிவித்ததாவது,
நான் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்ற தலைவரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களையோ பின்பற்றி அக்கட்சியில் இணைந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சந்தர்ப்பத்தில் தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்த வேளையில் அப்போது நமது நாட்டில் இருந்த குழப்பமான சூழ்நிலையில், பல்கலைக்கழக கல்வியை நமது மாணவர்கள் தொடர்வதில் இருந்த சிக்கல்நிலைகளின் காரணமாகவும் இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தரக் கூடிய ஒரே மகன் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் தான் என உணர்ந்ததன் காரணமாகவே அவருடன் இணைந்து செயற்பட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்ற பெரிய நிறுவனத்தை உருவாக்கப் பாடுபட்டேன். தனக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் அப்போது இருந்ததில்லை .
எங்களது முயற்ச்சியால் உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் தற்போது தங்களது சித்து விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துள்ளார்கள், அண்மையில் இடம்பெற்ற பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவின்போது நமது பிரதேசத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் இருவர் இருந்தும் அவர்களை திட்டமிட்டு புறக்கணித்து விட்டு, அவர்களுக்கு வாசியான வெளியூர் ஒருவரை உபவேந்தராக நியமித்துள்ளார்கள்
தேர்தல் காலங்களில் மட்டும் நமது பிரதேசங்களுக்கு வந்து பசப்புவார்த்தைகளைக்கூறி வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பின்னர் எங்களை நட்டாற்றில் விடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமைத்துவத்தையும் அதனோடு ஒட்டிக்கொண்டிருக்கும் கிளிகளையும் இன்னும் நாம் ஆதரிக்க வேண்டுமா? மறைந்த தலைவரைப் போன்று ஒரு அகதியாக வந்த முஸ்லிம் மக்களின் மீது உண்மையான அக்கறையுடன் செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் போன்ற தலைவர்களை ஆதரிப்பதன் ஊடாகவே தலைவர் அஷ்ரப் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர முடியும். இவ்வாறு ஜெமீல் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top