உணர்வுபூர்வமான உரையுடன்
ஓய்வு பெற்ற
பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார!
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின்
உயரிஸ்தானிகர்
பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு!!
பிரபல
கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார சர்வதேச
கிரிக்கட் போட்டிகளிலிருந்து
ஓய்வுபெறுவதை முன்னிட்டு இன்று 24 ஆம் திகதி கொழும்பு
பி சரணவனமுத்து
மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன பிரதம
அதிதியாகக் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி
நினைவுச் சின்னமொன்றை
குமார் சங்கக்காரவுக்கு
கையளித்து. ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயரிஸ்தானிகர்
பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு
ஜனாதிபதி அழைப்புவிடுத்தார்.
இந்தியா
- இலங்கை அணிகளுக்கு
இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியுடன் இலங்கை
அணி வீரர்
சங்ககாரா சர்வதேச
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இங்கு மிகவும் உணர்வுபூர்வமாக குமார் சங்கக்கார பேசுகையில்
தெரிவித்ததாவது:
நான் நிறைய பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய அனைத்து முன்னாள் கேப்டன்கள், என்னுடன் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் நன்றி. நீங்கள் எனக்கு அளித்த ஆதரவும் ஊக்கமும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது.
என்னிடம் நிறைய பேர் எனக்கு தூண்டுகோலாக அமைந்தது எது என்று கேட்கிறார்கள். எனது பெற்றோர். மன்னிக்கவும், நான் உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக கூறவில்லை. நீங்கள்தான் எனது தூண்டுகோல். நான் வீட்டில் பாதுகாப்பாக உணர்ந்தேன். நாம் நம் குடும்பத்தை தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறுவார்கள், ஆனால் நான் உங்கள் குழந்தையாக பிறந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் உணர்ச்சிவசப்பட மாட்டேன். ஆனால் எனது பெற்றோரும் உறவினர்களும் உள்ள இந்தத் தருணம் மிகவும் அரிய தருணம் ஆகும்.
எனது பெரிய சாதனைகள் பற்றி கேட்கிறார்கள். சதங்கள், உலகக் கோப்பை வெற்றி. இதைத் தாண்டி நான் பார்ப்பது, கடந்த 30 ஆண்டுகளில் நான் பெற்ற நண்பர்களை. அவர்கள் இந்தத் திங்கள் கிழமை அன்று நான் ஆடுவதைப் பார்க்க வந்துள்ளார்கள். நான் வென்றாலும் தோற்றாலும் என்னை எப்போதும் நேசிக்கும் குடும்பம். இது என் பெரிய சாதனை. என்றார்.
0 comments:
Post a Comment