முஸ்லிம் கட்சிகளால்
ஏமாற்றப்பட்டிருக்கும்
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள்
முஸ்லிம் கட்சிகளான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளின் தலைவர்களாலும் கிழக்குப்
பிரதேசத்தில் அக்கட்சிகளுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்
என்று இப்பிரதேச மக்கள் கருத்துக்களை தெரிவித்திருப்பதுடன் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
இரு கட்சித் தலைவர்களாலும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம்
செல்வதற்கு தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் நபர்கள் குறித்தும் முஸ்லிம் கட்சித்
தலைவர்கள் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் காலங்களில் இடம்பெற்ற அரசியல் மேடைகளில் தேசியப்
பட்டியல் நியமனம் குறித்து நிகழ்த்திய வாக்குறுதி
உரைகள் குறித்துமே கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களிடையே பலமான எதிர்ப்பும் கண்டனமும்
தற்போது தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள
குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லி மக்களின் பெரும் எண்ணிக்கையான வாக்குகளைப்
பெற்றுக் கொண்ட இக்கட்சியின் தலைமைத்துவம் டம்பி
உறுப்பினர்கள் என மக்களை ஏமாற்றி தனது இரத்த உறவினர்களுக்கு வழங்கியிருப்பது கிழக்குப்
பிரதேச குறிப்பாக திருக்கோணமலை, அம்பாறை மாவட்ட முஸ்லி மக்களிடம் கவலையையும் ஆத்திரத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
தேசியப் பட்டியல் மூலம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற இரண்டு ஆசனங்களில்
ஒன்றை கம்பஹா மாவட்டத்திற்கும் மற்றொன்றை குருணாகல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டிருக்குமேயானால்
முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் கிழக்கு வாழ்
முஸ்லிம்கள் சற்று ஆறுதல் அடைந்திருப்பார்கள். ஆனால் இக்கட்சியின் தலைமைத்துவம் டம்பி உறுப்பினர்கள் எனக்கூறி தனது இரத்த உறவினர்களுக்கு
வழங்கியிருப்பது மக்களை ஏமாற்றிய ஒரு விடயமாகவே மக்களால்
கருதப்படுகின்றது.
தேசியப் பட்டியல் விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து சரியான தீர்மானம் எடுக்கமுடியாத
ஒரு கட்சியின் தலைமைத்துவம் எவ்வாறு சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போகின்றது
என்ற கேள்வியும் சமூகப் பெரியார்களால் முன் வைக்கப்படுகின்றது.
எது எவ்வாறு இருந்த போதிலும் டம்பி உறுப்பினர்கள்
என்ற அடையாளத்தில் இரத்த உறவினர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்
பதவி வழங்கப்பட்டிருக்கிறது, முஸ்லிம் சமூகம் கட்சித் தலைமைத்துவத்தால் ஏமாற்றப்பட்டிருக்கிறது
என்பது பெருபாலான மக்களின் கருத்தாகவே உள்ளது.
இதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைத்துவமும்
அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் அந்த உறுதிமொழியை காற்றில்
பறக்கவிட்டுள்ளதாகவும் கிழக்குவாழ் முஸ்லிம் மக்களால் கவலையுடன் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றது.
ஆக மொத்தத்தில் இரண்டு முஸ்லிம் கட்சிகளின் தலைமைத்துவங்களும்
கிழக்கில் உள்ள முஸ்லிம்களை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டிருப்பதாகவே தேசியப் பட்டியல்
உறுப்பினர் நியமனம் மூலம் நிருபித்துள்ளார்கள் என நடுநிலை அரசியல் அவதானிகள் கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர்.
இரண்டு முஸ்லிம் கட்சிகளால் நியமிக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்கள்
விபரம்,
எம்.எச்.எம்.நவவி (புத்தளம், அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ்)
எம்.எச்.எம்.சல்மான் (கண்டி, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் (சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
0 comments:
Post a Comment