அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தேசியப்
பட்டியல் உறுப்பினர் யாருக்கு? எந்த பிரதேசத்திற்கு?
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது செல்வாக்கைப் பரவலாக்கி தனது இருப்பை
மேலும் பலப்படுத்தியுள்ளதை நடைபெற்று முடிந்துள்ள பொதுத் தேர்தல் மூலம்
நிருபித்துள்ளது என்பதை எவராலும் மறுத்துப் பேச முடியாது.
வன்னி, மட்டக்களப்பு, திருக்கோணமலை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது பலத்தைக்
காட்டியிருப்பதன் மூலம் இது நிருபனமாகின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக இருந்த திகாமடுல்ல மாவட்ட்த்தில் இப் பொதுத்
தேர்தலில் முதல் தடவையாகக் காலூன்றி 33,102 வாக்குகளப் பெற்று குறைந்த
எண்ணிக்கையான வித்தியாசத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை இழந்தது
முஸ்லிம் காங்கிரஸின் கோட்டைக்குள் விரக்தி அடைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸை நாடியுள்ள இந்த
மக்களின் நலன் கவனிக்கப்படல் வேண்டும். இதற்காக இக்கட்சிக்கு கிடைக்கவிருக்கும்
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி திகாமடுல்ல மாவட்ட்த்திற்கு அவசியம்
இக்கட்சியின் தலைமைத்துவத்தால் வழங்கப்படல் வேண்டும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திகாமடுல்ல மாவட்ட்த்தைப்
பிறப்பிடமாகக் கொண்டுள்ள ஏ.எம்.ஜெமீல், வை.எல்.எஸ்.ஹமீத் ஆகியோர்களின் பெயர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில்
ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
வை.எல்.எஸ்.ஹமீத் அவர்கள் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். கட்சியின்
செயலாளராகக் கடமையாற்றுபவர்கள். (கல்முனையில் ஒரு எம்.பி, தெரிவு செய்யப்பட்டும் இருக்கிறார்) கட்சியை மேலும் பலப்படுத்தி வளர்க்க வேண்டுமாக
இருந்தால் பல விட்டுக் கொடுப்புக்களுடனும் தியாகங்களுடனும் கட்சியின் செயலாளர்
செயல்பட்டேயாகவேண்டும்.
அந்த வகையில் இந்த தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் திகாமடுல்ல
மாவட்ட்த்தில் சாய்ந்தமருதைப் பிறப்பிடமாக்க் கொண்டுள்ள ஏ.எம்.ஜெமீல் அவர்களுக்கு
வழங்குவதன் மூலம் கட்சியை இம்மாவட்ட்த்தில் மேலும் வளர்த்து எடுக்கக் கூடியதாக
இருப்பதுடன் ஜெமீலின் சுறுசுறுப்பான செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் ஐக்கிய தேசியக்
கட்சியின் சின்னத்தில் தெரிவாகியுள்ள இம்மாவட்ட்த்திலுள்ள ஏனைய மூன்று முஸ்லிம்
பிரதிநிதிகளையும் ஏட்டிக்குப் போட்டியாகச் சுறுசுறுப்படையச் செய்து இம்மாவட்ட
மக்களின் நலனில் அக்கறை செலுத்த வாய்ப்பு ஏற்படும். இதற்கு அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் இப்பிரதேச மக்களுக்கு பெரிய உதவி ஒன்றைச் செய்துள்ளதாகவும் கருத முடியும்.
எனவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மக்களினதும் கட்சியினதும்
எதிர்கால நலன் கருதி வழங்குவதாக இருந்தால் அது ஏ.எம்.ஜெமீல் அவர்களுக்கு வழங்குவதே
மிகப் பொருத்தமானதும் சிறந்த முடிவாகவும் இருக்கும்.
கட்சியின் தலைமை இக்கருத்துக்களை துல்லியமாக ஆராய்ந்து ஒரு சிறந்த முடிவுக்கு
வரவேண்டும் என திகாமடுல்ல கட்சி ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது
மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment