கல்முனை ஐக்கிய விளையாட்டு மைதானத்தின் பிரதான
நுழைவாயில் வீதிக்கு
கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வீதி
என சூட்டப்படுவதற்கு
தமிழர்கள் எதிர்ப்பு
கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு
கேட்முதலியார் எம்.எஸ் காரியப்பரின் பெயர் சூட்டப்படுவதற்கு தமிழர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அத்துடன்
குறித்த வீதியின்
பெயர்ப் பலகை
அடங்கிய கல்வெட்டினை
டெலோ
அமைப்பின் பொதுச் செயலாளரும், கல்முனை மாநகர
சபையின் முன்னாள்
எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்றி மகேந்திரன் பகிரங்கமாக
உடைத்துள்ளார்.
இந்த
வீதி தொடர்பான
பெயர்ப் பலகை
அடங்கிய கல்வெட்டு
இன்று மாலை திறக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட மற்றும்
பல முக்கிய
அரசியல் பிரமுகர்களும்
கலந்து கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது..
0 comments:
Post a Comment