எம்.எச்.எம்.அஷ்ரப் காங்கிரஸ்

புதிய கட்சி  ஒன்றை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள்?

முஸ்லிம்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் எதுவித சுயநல நோக்கத்திற்காகவும் விட்டுக்கொடாது சமூக நலனை மாத்திரம் முன்னிலைப்படுத்தி வென்றெடுப்பதற்கு “எம்.எச்.எம்.அஷ்ரப் காங்கிரஸ் எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் உடைந்து சிதறி இன்று முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் ரவூப் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் றிஷாத் பதியுதீன் காங்கிரஸும்  முஸ்லிம் சமூகத்திற்கான கட்சிகளாக ஏதேதோ கூறிக்கொண்டு எஞ்சி நிற்பதாக ஆரம்பகால முஸ்லிம் காங்கிரஸ் கட்சிப் போராளிகள் கவலையுடன் கூறுவதாக புதிய கட்சியை உருவாக்குபவர்கள் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
இன்று முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளால் தேசியப் பட்டியல் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டு அந்த அரசியல் அதிகாரத்தைக்  கோருவதன் மூலம் முஸ்லிம் சமூகம் ஊர் வாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கும் மேலாக இந்த தேசியப் பட்டியலுக்காக ஊருக்குள்ளும் பல பெயர்கள் முன் வைக்கப்பட்டு கட்சித் தொண்டர்கள் இரண்டு, மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மோதவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தனிப்பட்டவர்களுக்கான அதிகாரங்களைக் கோரி பிரதேச வாரியாகவும் ஊர் வாரியாகவும் சிதறிக் கிடக்கும் முஸ்லிம் சமூகத்தை மர்ஹும் அஷ்ரப் அவர்களின் சிந்தனையுடன் ஒன்றிணைப்பதே “எம்.எச்.எம்.அஷ்ரப் காங்கிரஸ்ருவாக்கத்தின் பிரதான நோக்கம் என அறிவிக்கப்படுகின்றது.

மர்ஹும் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்த  காலத்தில் அன்னாரின் பக்கத்தில் இருந்து சமூகப்பற்றுடன் செயலாற்றிய பல பிரமுகர்கள் ஒன்றிணைந்து ஆரம்பகால கட்சிப் போராளிகளின் ஆதரவுகளையும் பெற்று இக்கட்சியை உருவாக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top