பொதுச்செயலாளர் பதவியிலிருந்து
சுசில் பிரேமஜயந்த இன்று இராஜினாமா
ஐக்கிய
மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து
சுசில் பிரேமஜயந்த,
இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.
இதேவேளை, தேசியப்பட்டியல்
நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தமை தொடர்பாக
கட்சி தன்னுடன்
கலந்தாலோசிக்கவோ அல்லது வேறு வகையில் தன்னை
தொடர்புகொள்ளவோ இல்லையெனவும் இதனுடன் தனக்கு எந்தவிதமான
சம்பந்தமும் இல்லை என கூறியுள்ள ஐ.ம.சு.கூட்டமைப்பின் முன்னாள்
பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜெயந்த இது தொடர்பில்
தன்னை யாரும்
குறைகூற வேண்டாம்
என்றும் தெரிவித்துள்ளார்.
ஐ.ம.சு.கூ.வின்
பொதுச்செயலாளராக தான் செயற்படுவதை தடை செய்யும்
நீதிமன்ற கட்டளை
இன்னும் வலுவுள்ளதாக
உள்ளது. உண்மை
நிலை அறியாது
தன்னை விமர்சிப்பது
நியாயமற்றது என அவர் குறிப்பிட்டார். ஐ.ம.சு.கூட்டமைப்பின் பங்காளி
கட்சிகள் தமது
தோல்விக்கு என்னை குற்றஞ்சாட்டாமல் எனக்கு எதிராக
நீதிமன்ற கட்டளையை
வலுவிழக்க செய்திருக்கவேண்டும்.
ஐ.ம.சு.கூட்டமைப்பில்
போட்டியிடாதிருந்திருந்தால் இந்தளவுக்கு அங்கத்துவங்களை
பெற்றிருக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்வேண்டும்.
சரியான நிலை
தெரியாது என்னை
குறை கூறுவதால்
நான் கவலையடைகின்றேன்'
என்று தெரிவித்துள்ளார்.
.ம.சு.கூட்டமைப்பை
பாதுகாக்க தான்
பெரிதும் முயன்றதாகவும்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்த கட்சிகள்
தாம் ஐ.ம.சு.கூ.வில்
சேர்ந்ததால் அடைந்த நன்மைகளை மறந்து தன்னை விமர்சிப்பதாக
அவர் கூறினார். இதேவேளை
தேசிய சுதந்திர
முன்னணியின் தலைவர் வீமல் வீரவன்ச, தனது கட்சி வேட்பாளருக்கு ஐ.ம.சு.கூ.வின்
தேசிய பட்டியலில்
இடங்கொடுக்காது விட்டதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment