கல்முனையில் "ஏ.ஆர்..மன்சூர் பொது நூலகம்"
பெயர் பலகை தீயசக்திகளால்
நீக்கம்
கல்முனை
பொது நூலகத்தில்
பொறிக்கப்பட்டு இருந்த "ஏ.ஆர்..மன்சூர் பொது நூலகம்" என்னும் பெயர்
பலகை இரவோடு
இரவாக சில
தீயசக்திகளால் அகற்றப்பட்டுள்ளது.
கல்முனையில் நேற்று 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை டெலோ அமைப்பின் பொதுச் செயலாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்றி மகேந்திரன் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டவராக வீதியின் பெயர்ப் பலகை அடங்கிய கல்வெட்டு ஒன்றினை பகிரங்கமாக உடைத்தார்.
சட்டத்துறைக்குச் சென்று நீதி பெற்று தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டிய இந்த விடயத்தை இவர் காட்டுமிராண்டித்தனமாக சட்டம் இல்லாத ஒரு நாட்டில் செயல்படுவது போன்று செயல்பட்டார். இவரின் இச்செயல்பாடு பயங்கரவாத செயல்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
நேற்றைய
சம்பவத்தின் பின் தொடர்ச்சியான சம்பவமாக இச்சம்பவமும் இருக்கலாம் என
மக்கள் சந்தேகிக்கின்றனர்.
கல்முனை மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இந்த அடாவடித்தனமான செயல்பாடுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்
போகின்றார் என நீதியை நம்பியிருக்கும் மக்கள்
எதிர்பார்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.