சீனாவில் கடும்
நிலச்சரிவு
புயல் மற்றும் கனமழைக்கு இதுவரை 6 பேர் பலி
சீனாவில் சவ்டெலோர் புயல் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக
கனமழையும் கடுமையான கடல் கொந்தளிப்பு நிலவியதாக வெளிநாட்டுச் செய்திகள்
தெரிவிக்கின்றன
தைவானில் புயல் மற்றும் கனமழைக்கு இதுவரை சுமார் 6 பேர் பலியாகி உள்ளனர். 100 பேர் வரை காயமடைந்துள்ளனர். புயலின்
தாக்கத்தால் சீனாவில் கடும் நிலச்சரிவு, சூறாவளி காற்று மற்றும் கனமழை நீடித்து வருகிறதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை நோக்கி
சவ்டெலோர் புயல் நெருங்கிய நிலையில் அதன் தாக்கம் காரணமாக கடல் கொந்தளிப்புடன்
காணப்பட்டது. குறிப்பாக ஷெசியாங்க மாகாணத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து அதிக
பாதிப்பு ஏற்பட்டது.
பல மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் சிறி எழுந்து
பொதுமக்களை அச்சுறுத்தியது. பலத்த காற்றினால் வீடுகளும் வாகனங்களும் சேதமடைந்தன.
கடல் சீற்றம் காரணமாக முன்எச்சரிக்கை
நடவடிக்கையாக பிங்க்டன் மற்றும் புஃகிங் பகுதிகளை இணைக்கும் வகையில் கடலில்
அமைக்கப்பட்ட பாலம் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்தாகவும்
அறிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment