தன்மானமுள்ள கல்முனையான் இந்த தேர்தலில்
நமது தலைமகளுக்கு வாக்களிக்க வேண்டுமா?

Riyas Sulaima Lebbe

கல்முனையில் ஹென்றி மகேந்திரன் அரங்கேற்றிய இந்த அராஜகமானது எமது தலைமைகளால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் விடப்படுமானால் நாளை நமது சகோதரிகள் நகரில் மானத்தோடு செல்லமுடியுமா என்ற கேள்வியினை எழுப்புகின்றது. நமது சகோதரியை பட்டபகலில் கற்பழித்தது போன்ற ஒரு செயலே இன்று கல்முனையில் நடந்திருக்கின்றது.
இந்த நமது தலைமைகள் பேசா மடந்தைகளாக இருப்பார்களாக இருந்தால் இவர்கள் அனைவரையும் தேர்தலில் தோற்கடிப்பதற்காக கல்முனை தொகுதி முஸ்லிம்கள் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். தன்மானமுள்ள கல்முனையான் இந்த தேர்தலில் நமது தலைமகளுக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
நாளை பொது பலசேனா கல்முனைக்கு வந்தாலும் நமது வாக்கு திருடர்கள் இரண்டு மூன்று கொலைகள் விழாதா? கலவரம் வராதா? தேர்தல் வராதா? என்றே சிந்திப்பார்களே தவிர இவர்களால் எந்த முடிவும் நமக்கு ஏற்படப்போவதில்லை. அல்லாஹ் நமக்கு போதுமானவன்.
கல்முனைக்குடியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த அரசு தருவதாக வாக்களித்த ஏழு பேர்ச் நிலத்தினை வழங்குங்கள் என்று போராட்டம் நடத்தினேன். அப்போது எனது போராட்டத்தினை மழுங்கடிக்க உடனடியாக இந்த மக்களுக்கு நிலம் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ஒரு பொய்யான கடித்தத்தினை தயார் செய்து வழங்கி ஏமாற்றினீர்கள். அந்த அப்பாவி மக்களும் அதை நம்பினார்கள். அல்லாஹ்வின் சாபத்திலிருந்து நீங்கள் தப்ப முடியாது.உங்கள் மரணங்கள் உங்களைப்போன்ற சமுக துரோகிகளுக்கு எதிகாலத்தில் ஒரு பாடமாக அமையும். இன்ஷா அல்லாஹ்
உண்மையில் இன்று களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் ஆண்களாக இருந்தால் உங்கள் ஆண்மைக்கு ஒரு சவால் விடுகின்றேன்.
நமது கல்முனை நகரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கு அரும் பணியாற்றிய எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் பெயர் பொறித்த அந்த கல்வெட்டினை அதே இடத்தில் பொது தேர்தலுக்கு முன்னர் திரை நீக்கம் செய்தது காட்டுங்கள். பார்க்கலாம்.
நமது முஸ்லிம் சமுகத்தின் இதயத்தில் கைவைத்த இந்த செயலுக்கு எதிராக வீதிக்கு வாருங்கள் பார்க்கலாம்.
இதை செய்ய முடியாவிட்டால் உங்களுக்கு பிடவை தருகின்றேன் கட்டிக்கொண்டு அரசியலை விட்டு ஒதுங்கி விடுங்கள்.
தங்களால் முடியாது என்று பகிரங்கமாக கல்முனையின் காவலனாக இருக்கும் அரசியல் வாதிகள் (ஹரிஸ் உட்பட) கூறினால், அல்லாஹ்வின் நாட்டம் மக்கள் என்னோடு வந்தால் அந்த கல்வெட்டினை நான் திறந்து தருகின்றேன். இதுதான் கல்முனை மண்ணை மீட்கும் போராட்டம்.

இந்த சவாலை ஏற்க அரசியல் வாதிகள் தயாரா?...

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top