இஸ்ரேல் இராணுவத்தை எதிர்த்து
துணிச்சலாகப் போராடிய பாலஸ்தீனிய சிறுவன்
இஸ்ரேல்
இராணுவம்
மத்திய கிழக்கு
பகுதியில் உள்ள
மேற்குகரை பகுதியில்
பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனை எதிர்த்து
சிறுவன் ஒருவன்
துணிச்சலாக போராடிய காட்சியும் அந்த சிறுவனை
இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர்
கடுமையாக தாக்கி
அடக்குமுறைக்கு உட்படுத்தும் காட்சிகளும் சமூக வலைதளங்களில்
வேகமாக பரவி
வருகிறது. பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின்
கட்டுப்பாட்டில் மத்திய கிழக்கு பகுதியின் மேற்கு
கரை பகுதி
உள்ளது. அங்கு
இஸ்ரேல் நாட்டவர்கள்
அத்துமீறி குடியேறி
வருகின்றனர். இதனைக் கண்டித்தும் இராணுவ குவிப்பைக் கண்டித்தும்
அப்பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் தொடர்
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,
மேற்கு கரையில்
உள்ள நபி
சாலே பகுதியில்
நடைபெற்ற போராட்டத்தின்போது
தனது குடும்பத்துடன்
சிறுவன் ஒருவனும்
கலந்துகொண்டான். அப்போது அந்த சிறுவனை பிடித்து
இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர்
சிறுவனை அடக்குமுறைக்கு
உட்படுத்தும் காட்சியும் அதனையும் பொருட்படுத்தாமல் இராணுவத்திற்கு
எதிராக அந்த
சிறுவனும் கிராமத்தினரும்
போராடும் காட்சியும்
சமூக வலைதளங்களில்
வேகமாக பரவி
வருகிறது.
இந்த காட்சி சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment