றகர் விளையாட்டு
வீரர் வசீம் தாஜுதீனின்
ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது
2012ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமான பிரபல்யமான றகர்
விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் ஜனாஸா
இன்று காலை தோண்டப்பட்டு பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அவரது
ஜனாஸா தெஹிவளை
ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியிலேயே
அடக்கப்பட்டிருந்தது. அவரது
ஜனாஸாவை இன்று
10ஆம் திகதி
திங்கள்கிழமை
தோண்டியெடுப்பதற்கு கொழும்பு மேலதிக
நீதவான் நிஷாந்த
பீரிஸ், கடந்த
வியாழக்கிழமை அனுமதிவழங்கியிருந்தார்.
அதன்
அடிப்படையில், நீதிமன்ற வைத்திய அதிகாரி, பொலிஸ்,
தெஹிவளை கிராமசேவகர்
ஆகியோர் அவ்விடத்தில்
பிரசன்னமாய் இருந்தனர். அவரது
ஜனாஸா அடக்கப்பட்டுள்ள மையவாடிக்கு அண்டிய
பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இன்றையதினமும் பெருமளவான பாதுகாப்பு தரப்பினர் அங்கு
குழுமியிருந்தனர்.
குடும்பத்தினர்
விருப்பமின்மையினால் ஜனாஸாவை தோண்டியெடுப்பது
தொடர்பில் செய்தி
சேகரிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை
என்று தெஹிவளை
பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு சென்றிருக்கின்ற
ஊடகவியலாளர்கள் வேறொரு இடத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.
நாரஹேன்பிட்டியில்
உள்ள சாலிகா
விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து 2012ஆம்
ஆண்டு மே
மாதம் 16ஆம்
திகதி, அவர்
பயணம் செய்து
கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததில்
அவர் மரணமடைந்துவிட்டதாக
அந்த காலத்தில்
அறிக்கையிடப்பட்டிருந்தன. அவருடைய சடலம்
மறுநாள் 17ஆம்
திகதியன்று காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும்
காருக்கருகில் கரித்துண்டுகள் கிடந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார்
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment