இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்புக்கு
மதவாத அரசியலே காரணம்: சிவசேனை
இந்தியாவில்
சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி
முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது
கவலையளிக்கிறது. முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்திருப்பதற்கு மதவாத அரசியலே காரணம் என்று
சிவசேனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து
சிவசேனைக் கட்சியின்
நாளிதழான சாம்னாவில் நேற்று வியாழக்கிழமை
வெளிவந்த தலையங்கத்தில்
கூறப்பட்டுள்ளதாவது:
முஸ்லிம்களின்
எண்ணிக்கை அதிகரித்திருப்பது
கவலையளிக்கிறது. அவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதின் பின்னணியில்
மதம் சார்ந்த
சிந்தனை உள்ளது.
மதச்சார்பின்மை
என்ற முகமுடியை
அணிந்துகொண்டு, எதிர்வரும் 50 ஆண்டுகளுக்குள்
இந்தியாவை முஸ்லிம்
நாடாக மாற்றப்பட்டால்
அதில் வியப்பு
ஏதும் இருக்காது.
இந்த சக்திகளை எதிர்த்துப்
போராட 96 கோடி
ஹிந்துக்களும் ஒன்றுசேர வேண்டும். மேலும் அனைத்து
மதத்தவருக்கும் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்வது குறித்து
கடுமையான விதிகளை
அரசு கொண்டு
வரவேண்டும் என்று "சாம்னா'
தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment