எம்.எச்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுக்குப் பின்
முஸ்லிம்களின்
தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களே
சாய்ந்தமருதில் அல்லாஹு
அக்பர் கோஷத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டார்.
மர்ஹும் எம்.எச்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுக்குப் பின் முஸ்லிம்களின்
தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களே என
அமைச்சர் றிசாத் பதியுதீன் சாய்ந்தமருதில் அல்லாஹு அக்பர் கோஷத்துடன் மக்களால் பிரகடனப்படுத்தப்பட்டார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை இணைத்தலைமையிலிருந்து தனித்தலைமைத்துவமாக
2001. 02. 04 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட
சாய்ந்தமருது மண்ணிலேயே இவ்வாறு
முஸ்லிம்களின் தேசிய
தலைவர் றிசாத் பதியுதீன் என கூட்டத்தில் கூடியிருந்த பெரும் திரளான மக்களால் நாரே தக்பீர்
அல்லாஹு அக்பர் கோஷத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டு ஆரம்பகால முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
தீவிர போராளிகளால் பொன்னாடைகளாலும் போர்த்தப்பட்டார்.
திகாமடுல்ல
தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியினை உறுதிப்படுத்தும்
மாபெரும் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருது கடற்கரையில் நேற்று 8 ஆம் திகதி
மாலை ஆரம்பித்து நள்ளிரவையும் கடந்து அதிகாலை 1. 00 மணிவரை இக்கூட்டம்
இடம்பெற்றது.
கல்முனை
மாநகர முன்னாள் மேயரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐந்தாம் (5) இலக்க
வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் எழுர்ச்சிக் கூட்டத்திற்கு
பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய
தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்டத்தில்
தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் ஆகியோர்கள் உட்பட பிரதேசத்தில் உள்ள பல
பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
பெரு வெள்ளமாய்த் திரண்டிருந்த இம்மக்கள்
கூட்டத்தில் முஸ்லிம்களின் தேசியத் தலைவராக முஸ்லிம்களின் தேசிய தலைவர் மர்ஹும் எம்.எச்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுக்கு பிறகு முஸ்லிம்களின் தேசிய தலைவர் றிசாத்
பதியுதீன் அவர்கள்தான் என்று சாய்ந்தமருது மண்ணில் மக்களால்
அல்லாஹு அக்பர் கோஷத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்
றிசாத் பதியுதீன் பேசுகையில் முஸ்லிம்களின் தேசிய தலைவர் மர்ஹும்
எம்.எச்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் உரிமை,
நலன் போன்ற பல உயரிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
செயல்பாடு தற்போது இல்லை. தற்போது இருப்பது ஹக்கீம் காங்கிரஸே. கட்சி என்பது
எமக்கான ஒரு மதமல்ல என்று தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தேசிய அமைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல்
இங்கு உரை நிகழ்த்துகையில்,
பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் சமூகத்தின் நலன் ஒன்றே பிரதான நோக்கம்
எனக் கருதி உருவாக்கப்பட்ட கட்சியின் முலம் தற்போதய தலைவர் ரவூப் ஹக்கீம் உருப்படியாக
எதுவும் செய்வதாக இல்லை. முனாபீக் தனமாக அவர் செயல்படுகின்றார். அவரை சமூகம் நம்பியிருப்பது
பெரும் ஏமாற்றமாகவே முடியும். எனக் கூறியதுடன் தானும் தனக்கு வாக்களித்த மக்களும் எவ்வாறெல்லாம்
முனாபிக்தனமாக அவரால் ஏமாற்றப்பட்டோம் என்ற தகவல்களையும் ஹக் இது உண்மை என அல்லாஹ்வை
சாட்சியாக முன் வைத்து மக்களிடம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
கல்முனை மாநகர முன்னாள் மேயரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐந்தாம் (5) இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப்
இங்கு பேசுகையில்,
தான் கல்முனை மேயராக இருந்தபோது பிரதேசவாதம்,இனவாதம் காட்டி
சேவை செய்யவில்லை. எனது சேவையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவ்வாறு மக்களின்
விருப்பங்களுக்கு ஏற்றவாறு செயல்பட்ட எனக்கு ஒரு சந்தர்ப்பம் தந்து பாருங்கள்.
நான் சரிவர செயல்படவில்லையாயின் அடுத்த தடவை என்னை நிராகரித்துவிடுங்கள்.
ஹக்கீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊரில் உள்ள
அரசியல்வாதிகளை பிரித்து வைத்து அரசியல் செய்வதையே நோக்காகக் கொண்டு செயல்பட்டார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன்
அவர்கள் அதற்கு மாற்றமாக பிரிவினையாகச் செயல்படுபவர்களை ஒற்றுமைப்படுத்துவதில் முதன்மையானவராக
இருந்து கொண்டிருக்கின்றார். ஹக்கீம் காங்கிரஸில் இரு துருவங்களாக
செயல்பட்ட என்னையும் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலையும் பிரதேசத்தின் நன்மை கருதி ஒற்றுமைப்படுங்கள்
என்ற வேண்டுகோளை ஆரம்பத்தில் எங்களுக்கு விடுத்து எங்களை ஒற்றுமைப்படுத்தினார். அவரின்
நேர்மையான வழிகாட்டலில் எமது பிரதேசங்களை முன்னேற்றுவதற்கு பிரதேச மக்கள் ஒற்றுமைப்பட்டு
எங்களுக்கு ஒரு சந்தப்பத்தைத் தரல்வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment