இலங்கை நிர்வாக
சேவையின் தரம் 111 க்கு
172 பேர் தெரிவு
நியமனங்கள் எதிர்வரும் செப்.மாதம் 1ஆம் திகதி வழங்கப்படும
இலங்கை நிர்வாக சேவையின் தரம் 111 க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை- 2013 (2015) மற்றும்
2015 மே மாதம் அரசாங்க நிர்வாக உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சில்
நடைபெற்ற வாய்மொழிப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் கீழ்குறிப்பிட்ட 172
விண்ணப்பதாரிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் (2015. 09. 01) 1 ஆம்
திகதி முதல் இலங்கை நிர்வாக சேவையின் தரம் 111
க்குஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது
என அரசாங்க நிர்வாக உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே
அறிவித்துள்ளார்.
இலங்கை நிருவாக சேவை111 க்கு நாடளாவியரீதியில் 172 பேர்
தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களுள் 19பேர் தமிழ்பேசுவோராவர்.
கடந்தாண்டு நடைபெற்ற திறந்த போட்டிப்பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் 215 பேர் நேர்முகப்பரீட்சைகளுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இரு தடவைகள் இடம்பெற்ற நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றியதன்பேரில்
172பேர் தற்போது தெரிவுசெய்யப்பட்டு பெயர்விபரங்கள் பொதுச்சேவை ஆணைக்குழுவினால்
வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பரீட்சைக்கு சுமார் 40ஆயிரம்
பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment