திங்கள்கிழமை நடைபெறவுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில்
196 உறுப்பினர்களுக்காக 6151 பேர் போட்டி

நாளை மறுதினம் 17ஆம் திகதி திங்கள்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில் இருந்தும் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக  6151  பேர் போட்டியிடுகின்றனர்.
மொத்தமாக 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டியில் இம்முறை 22 மாவட்டங்களில் அரசியல் கட்சிகளும் சுயேட்சை அணிகளும் நேரடியாகவே களமிறங்கியுள்ளன.
நாடளாவிய ரீதியில் இம்முறை அரசியல் கட்சிகளில் இருந்து 3653 பேரும், சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 2498 பேரும் பாராளுமன்றம் செல்வதற்கு போட்டியிடுகின்றனர்.
விகிதாசார தேர்தல் முறைப்படி 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பு மூலம் நேரடியாகவும் 29நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விகிதாசாரப்படி தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுகின்றனர். நாட்டில் 22 தேர்தல் மாவட்டங்களும் 160 தேர்தல் தொகுதிகளும் காணப்படுகின்றன.

தேர்தல் மாவட்ட ரீதியாக வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை தேர்தல் தொகுதிகளின் (இரட்டைத் தொகுதிகள் உட்பட) எண்ணிக்கையும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய விபரமும் வருமாறு,
தேர்தல் மாவட்டம்
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை
தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
கொழும்பு
1,586,598
17
19
கம்பஹா
1,637,537
17
18
களுத்துறை
897,349
09
10
மஹநுவர (கண்டி)
1,049,160
11
12
மாத்தளை
379,675
04
05
நுவரெலியா
534,150
06
08
காலி
819,666
09
10
மாத்தறை
623,818
07
08
அம்பாந்தோட்டை
462,911
05
07
யாழ்ப்பாணம்
529,239
06
07
வன்னி
253,058
03
06
மட்டக்களப்பு
365,167
04
05
திகாமடுல்ல (அம்பாறை)
465,757
05
07
திருக்கோணமலை
256,852
03
04
குருணாகல்
1,266,443
13
15
புத்தளம்
553,009
06
08
அநுராதபுரம்
636,733
07
09
பொலன்னறுவை
307,125
03
05
பதுளை
620,486
06
08
மொனராகலை
339,797
03
05
இரத்தினபுரி
810,082
09
11
கேகாலை
649,878
07
09
மொத்தம்
15,044,490
160
196



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top