ஹென்றி மகேந்திரனின் காடைத்தனத்திற்கு
சட்டம் என்ன தண்டனை
வழங்கப் போகின்றது?
மக்கள் கேள்வி
கல்முனையில் டெலோ அமைப்பின் பொதுச் செயலாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்றி மகேந்திரன் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டவராக வீதியின் பெயர்ப் பலகை அடங்கிய கல்வெட்டினை பகிரங்கமாக உடைத்துள்ளார்.
சட்டத்துறைக்குச் சென்று நீதி பெற்று தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டிய இந்த
விடயத்தை இவர் காட்டுமிராண்டித்தனமாக சட்டம் இல்லாத ஒரு நாட்டில் செயல்படுவது
போன்று செயல்பட்டுள்ளார். இவரின் இச்செயல்பாடு
பயங்கரவாத செயல்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
வீதியின் பெயர்ப் பலகை அடங்கிய கல்வெட்டு அவ்விடத்தில் நடப்பட்டது
சரியோ அல்லது பிழையோ அது வேறு விடயம். இது
குறித்து மாநகர சபையில் ஆராய்ந்து தீர்மானம் எடுத்திருக்கவேண்டும். ஆனால் கல்முனை மாநகர
சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் பகிரங்கமாக வீதியின் பெயர்ப்
பலகை அடங்கிய கல்வெட்டினை இவ்வாறு உடைப்பது என்பது ஒரு சர்வாதிகார செயல்பாடாகும். இப்பிரதேசத்தில்
வன்முறைகள் மீண்டும் தோன்றுவதற்கு இது ஒரு முதல்படியாகவும் கருத வேண்டியுள்ளது.
இவரின் இந்த காடைத்தனத்திற்கு சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகின்றது
என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
0 comments:
Post a Comment