முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலுக்கு எதிரான
தேர்தல் வழக்கு
தள்ளுபடி!
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் அம்பாறை மாவட்ட
வேட்பாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்
முன்னாள் உபவேந்தருமான
எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு
எதிராக தாக்கல்
செய்யப்பட்ட றிட் மனுவினை, இன்று 13ஆம் திகதி வியாழக்கிழமை – மேல்
முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சம்மாந்துறை
பிரதேச சபையின்
முன்னாள் உறுப்பினரும்,
சிரேஷ்ட சட்டத்தரணியுமான
எஸ்.எம்.எம். முஸ்தபா
என்பவர், வேட்பாளர்
இஸ்மாயிலுக்கு எதிராக இந்த றிட் மனுவினை
தாக்கல் செய்திருந்தார்.
அரசியலமைப்பு
மற்றும் பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழுவின் தாபனக்கோவை ஆகியவற்றை மீறிய
நிலையில், மேற்படி
இஸ்மாயில் என்பவர்
– தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், தான் வகித்து வந்த
சிரேஷ்ட விரிவுரையாளர்
பதவியினை ராஜிநாமாச்
செய்யாத நிலையிலேயே, எதிர்வரும்
பொதுத் தேர்தலுக்கான
வேட்புமனுவினை தாக்கல் செய்ததாக, குறித்த மனுவில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம்மனு
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மனுதார சார்பில்
சிரேஷ்ட சட்டத்தரணி
நிஸாம் காரியப்பரும்
பிரதிவாதி இஸ்மாயில்
சார்பில் ஜனாதிபதி
சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது
நீண்ட வாதப்
பிரதிவாதங்கள் இடம்பெற்றன. அதேவேளை கலாநிதி இஸ்மாயில்
வேட்பு மனுத்
தாக்கலுக்குப் பின்னர் ஜூலை 22 ஆம் திகதியே
தனது ராஜினாமா
கடிதத்தை சமர்ப்பித்து,
அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் என சட்ட மா
அதிபர் நீதிமன்றுக்கு
தெரியப்படுத்தினார்.
இவற்றை
செவிமடுத்த நீதிபதி, கலாநிதி இஸ்மாயில் பாராளுமன்ற
உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அது விடயமாக
இன்னொரு மனுவைத்
தாக்கல் செய்யும்
உரிமை மனுதாரருக்கு
உள்ளது எனவும்
இப்போது கலாநிதி
இஸ்மாயிலை தேர்தலில்
போட்டியிடுவதில் இருந்து தடுக்கும் அதிகாரம் இந்த
நீதிமன்றத்திற்குக் கிடையாது எனவும்
அதனால் இம்மனுவை
தள்ளுபடி செய்வதாகவும்
அறிவிவித்தார்.
0 comments:
Post a Comment