நீதிமன்றத்தின் தீர்ப்பு சதிக்கு மாறாக அமைந்துள்ளது
பதவி துறப்பார்களா ஹக்கீமும், நிஸாம் காரியப்பரும்

- ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் ஏ.எம்.ஜெமீல் கேள்வி


வேட்பாளர் இஸ்மாயில் பாராளுமன்றம் சென்றால் தனது செவியை அறுப்பேன் என்று சவால்விட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு அவரது சதிக்கு மாறாக அமைந்துள்ளது. இவ்வாறு சவால்விட்ட அவர் தான் ஒரு தலைவர் என்று காட்டுவதற்காக தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வாரா என்று கேட்கின்றேன். அதே போன்று இந்த வழக்கை நடாத்திய சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இன்னும் மூன்று மாத காலங்கள்தான் உள்ள மேயர் பதவியை இராஜினாமாச் செய்யவாரா என்றும் கேட்கின்றேன். இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் கேள்வி எழுப்பியுள்ளார்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முறையான அனுமதியைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட ரீட்மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
சாய்ந்தமருதில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்ற  இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
வாக்காளர்களை குழப்புவதற்காக போலியான வழக்குத் தாக்குதலை மேற்கொண்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மூக்குடைந்துள்ளார். இவர்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியே அரசியல் செய்து வந்துள்ளார்கள். ,
வேட்பாளர் இஸ்மாயில் பாராளுமன்றம் சென்றால் தனது செவியை அறுப்பேன் என்று சவால்விட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு அவரது சதிக்கு மாறாக அமைந்துள்ளது. இவ்வாறு சவால்விட்ட அவர் தான் ஒரு தலைவர் என்று காட்டுவதற்காக தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வாரா என்று கேட்கின்றேன். அதே போன்று இந்த வழக்கை நடாத்திய சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இன்னும் மூன்று மாத காலங்கள்தான் உள்ள மேயர் பதவியை இராஜினாமாச் செய்யவாரா என்றும் கேட்கின்றேன்.
இன்று அம்பாரை மாவட்டத்தில் உள்ள களநிலவரப்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சுமார் 50ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது. இவ்வாறு ஜெமீல் தெரிவித்தார்
வேட்பாளர்  கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சம்மாந்துறை மக்களையும், அம்பாரை மாவட்டத்தில் உள்ள எமது கட்சியின் ஆதரவாளர்களையும் சங்கடத்திற்குள் உட்படுத்தி எம்மை தோல்வியடையச் செய்ய வேண்டுமென்பதற்காக தொடுக்கப்பட்ட வழக்கு, அது போலியானது என்பது நிருபனமாகியுள்ளது.
அவர்கள் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் இவ்வாறான குழப்பங்களை மக்கள் மத்தியில் உருவாக்கித்தான் அரசியல் இலாபமடைந்துள்ளார்கள். இதனை இத்தேர்தலிலும் செய்து அரசியல் இலாபமடைந்து கொள்வதற்கு எத்தனித்துள்ளார்.
 நான் வெற்றி பெற்றாலும் பாராளுமன்றத்தின் கதிரையில் அமரவிட மாட்டேன் என்று சவால்விட்டுள்ளதனை வைத்துப் பார்க்கும் போது, எனக்கு கொலை அச்சுறுத்தல் கூட விடுக்கலாமென்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் என் மீது போட்ட போலியான வழக்கிற்காக ரூபா 500 மில்லியன் நஸ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்வதற்க எனது சட்டத்தரணிகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றேன். விரைவில் அந்த வழக்கை தாக்கல் செய்வேன். ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட இந்நடவடிக்கை எனக்கான மக்கள் ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறு கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top