ஸ்டோக்ஸ் வீசிய அந்த கடைசி ஓவரின்
வெற்றி தேடிக்கொடுத்த 6 6 6 6
யார் இந்த கார்லோஸ் பிரத்வெயிட்?
20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசி வெற்றி தேடித்தந்தார் கார்லோஸ் பிரத்வெயிட்
கடைசி ஓவரில் துளி கூட பயமே இல்லாமல் அடுத்தடுத்து நான்கு சிக்ஸர்கள் அடித்ததால் ஒரேநாளில் கவனம் பெற்றுள்ளார் 27 வயது பிரத்வெயிட்! யார் இந்த கார்லோஸ் பிரத்வெயிட்?
2011ல் வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமானார் பிரத்வெயிட். அதன்பிறகு பலவருடங்கள் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். 2015-ல் தான் மீண்டும் அணிக்குத் தேர்வானார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இரண்டு அரை சதங்கள் எடுத்தார். இதனால் அவர்மீது எல்லோருக்கும் நம்பிக்கை வந்தது.
இதனால் ஆல்ரவுண்டர் என்கிற முறையில் ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணிக்கு 4.2 கோடி ரூபாய்க்குத் தேர்வானார். அடிப்படைச் சம்பளமான ரூ. 30 லட்சத்திலிருந்து 14 மடங்கு அதிகமாகப் பெற்றார்.
டி20 உலகக் கோப்பை அணியில் கிரண் போலார்ட் காயம் காரணமாக விலகிய நிலையில் பிரத்வெயிட் அணிக்குத் தேர்வானார். இன்று உலகக் கோப்பையின் கடைசி ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன் ஆனது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை இரு முறை கைப்பற்றிய முதல் அணி என்ற வரலாற்றைப் படைத்தது.
கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசி வெற்றி தேடித்தந்தார் கார்லோஸ் பிரத்வெயிட். சாமுவேல்ஸ் 66 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். பிரத்வெயிட் 10 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மற்ற நாட்டு வீரர்களுக்கு நிறைய வசதி வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எங்களிடம் இயற்கையான திறமை உள்ளது என்கிறார் பிரத்வெயிட். இறுதிப் போட்டிக்கு முன்பு, ‘இன்னமும் பிரத்வெயிட்டின் திறமை வெளிப்படவில்லை. எல்லா வீரர்களும் அவரவர் திறமையை வெளிப்படுத்தும்போது மேற்கிந்தியத் தீவுகள் இன்னமும் பலமாக இருக்கும்’ என்றார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சமி. அதுதான் இப்போது உண்மையாகியுள்ளது.
0 comments:
Post a Comment