கல்முனை மாநகர சபைக்கு சுமார் எட்டு கோடி ரூபாய்
சோலை வரி நிலுவை
அறவிட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக
மாநகர முதல்வர் தெரிவிப்பு
கல்முனை மாநகர சபைக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் பொதுமக்கள் செலுத்த வேண்டிய சோலை வரி நிலுவையாக உள்ளதாக
அறிவிக்கப்படுகின்றது.
இந்த வரிகள் அனைத்தையும் அறவிடுவதற்காக அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர், தெரிவித்துள்ளார்.
அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் வரிகளை செலுத்தாதோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
கல்முனை பிரதேச சபையாக இருந்து மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டு, 15 வருடங்களாகியுள்ளன. இருப்பினும், இந்தச் சபைக்குட்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்களுக்கான சோலைவரி, வியாபார வரி மற்றும் விளம்பரக் கட்டணங்களை அறவிடுவதற்கு சட்ட ரீதியான ஏற்பாடு மேற்கொள்ளப்படாமையால் அவற்றை அறவிடுவதில் அசௌகரியங்கள் காணப்பட்டன.
தற்போது இதை நிவர்த்தி செய்து சட்ட ரீதியாக வரிகளை அறவிடுவதற்காக கடந்த இ ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரச வர்த்தமானியில் தன்னால் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பின்னரும் வரி செலுத்தாதோர் மீது மாநகர சபையால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு வரி அறவிட முடியுமெனவும் அவர்தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment