நீர்ப்பாசனத் திணைக்கள கருத்தரங்கு
ஒரு நாள் செலவு மூன்று கோடி எட்டு லட்சம் ரூபா

நல்லாட்சியிலும் இப்படியா?



இன்று கொழும்பில் நடைபெறவுள்ள நீர்ப்பாசன திணைக்கள கருத்தரங்கின் ஒருநாள் செலவு மூன்று கோடி எட்டு லட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சின் சார்பில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று தேசிய விவசாயிகள் சம்மேளன மாநாடும், கருத்தரங்கும் நடைபெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் அதிதிகளுக்கான சிற்றுண்டிக்கு மட்டும் இரண்டு லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கான உணவு, பானங்களுக்கு அறுபது லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்மேளனத்தின் விவசாயிகளை கொழும்புக்கு அழைத்து வர 75 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அரச வைபவங்களில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஜனாதிபதி கலந்து கொள்ளும் இன்றைய ஒருநாள் வைபவத்தின் செலவு மட்டும் மூன்றுகோடி எட்டு லட்சம் ரூபாவாகும்.

நல்லாட்சி, பொதுமக்களின் வரிப்பணம் சிக்கன செலவு என ஷோ காட்டிக் கொண்டிருந்தாலும் இந்த அரசாங்கமும் மஹிந்த அரசாங்கம் போன்றே ஆடம்பரப் பிரியர்களின் அரசாங்கம் என்பதை மறைமுகமாக உணர்த்திக் கொண்டிருக்கின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top