சமூகத்தின் பிரச்சினைகளுக்கு
முகம் கொடுக்காமல்
நழுவிச் செல்வது வரலாற்றுத்
துரோகமாகவே பார்க்கப்படும்.
அக்கரைப்பறில்
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
'இன்று மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருந்து வருகின்றோம். ஆட்சியைக் கொண்டுவருவதற்கு பக்கபலமாக இருந்தது எமது சமூகம். அந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் நழுவிச் செல்வது வரலாற்றுத் துரோகமாகவே பார்க்கப்படும். அரசியலமைப்பு மாற்றம், தேர்தல்முறை மாற்றம், எல்லை நிர்ணயம் போன்ற விடயங்கள் தொடர்பாக எமது சமூகத்துக்கான தீர்வுத்திட்ட முன்வரைவு ஒன்றினை நாம் ஒன்றுபட்டு தயார்ப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். அதைவிடுத்து எங்களுக்குள்ளே எவ்வாறு அவரைத் தோற்கடிப்பது, எவ்வாறு அரசியலிருந்து அவரை வீழ்த்துவது என்பது தொடர்பான சிந்தனை மாத்திரமே திவிர வேறு எதுவும் கிடையாதது போல் சிலர் செயல்படுகின்றனர்' என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அக்கரைப்பறில் கடந்த 4 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் உரையாற்றியபோது மேலும் தெரிவித்தததாவது,
'இந்த நாட்டில் ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படுவதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்ற வேளையில், தமிழ் தலைமைத்துவங்கள் அதற்கான ஆலோசனைகளை முன்வைத்து வருகின்றன. சகோதரர் சம்மந்தன், சமஷ்டி பற்றி பேசுகின்றார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன், அதற்கும் மேலே கேட்கிறார். சகோதரர் கஜேந்திரன் பொன்னம்பலம், இன்னும் ஒரு படி மேலே கேட்கிறார். அவர்களுக்கிடையலான பிரச்சினை கூடுதலான அதிகாரங்களைப் பெறுவதாகவே உள்ளது. ஆனால், எங்களுக்குள்ளே எவ்வாறு அவரைத் தோற்கடிப்பது, எவ்வாறு அரசியலிருந்து வீழ்த்துவது என்பது தொடர்பான பிரச்சினை மாத்திரமே திவிர வேறு எதுவும் கிடையாதது போல் தெரிகிறது'
அரசியலமைப்பு மாற்றம், தேர்தல்முறை மாற்றம், எல்லை நிர்ணயம்
போன்ற விடயங்கள் தொடர்பாக எமது சமூகத்துக்கான தீர்வுத்திட்ட முன்வரைவு ஒன்றிற்காக புத்திஜீவிகள், கல்விமான்கள், உலமாக்கள், இளைஞர்கள், பொது அமைப்புக்கள் ஒன்றுபட்டு அழுத்தம் கொடுக்கவேண்டியது அவசியமாகும்.
முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை அவர்களின் அபிலாஷைகளை கேட்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு தற்போது நேரம் கிடையாது. எதிர்வருகின்ற 20 ஆம் திகதிக்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா, பேரியல் அஸ்ரப் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் புத்தி ஜீவிகள், உலமாக்கள் ஆகியோரை அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைத்து அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக ஆலோசனைகளைப் பெறவுள்ளோம். இதன் மூலம் எமது சமூகத்தினது பிரதி நிதித்துவம் இழக்கப்படாதவாறும், சமூகத்திற்கான உரிமைகள், வரப்பிரசாதங்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் காத்தி;ரமான தீர்வுமுன்யோசனை வழங்கவுள்ளோம்.
ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் முகவர்கள், மக்களை சுதந்திரமாக செயற்படவிடாமல்
இனவாதக் கருத்துக்களைக்
கூறி அவர்களை
ஏமாற்றுவது மாத்திரமன்றி, பணயக் கைதிகளைப் போன்றும் நடத்துகின்றனர்'
'முஸ்லிம்
காங்கிரஸ் தலைமையின்
கபட நாடகம்
இன்று அனைவருக்கும்
புரிந்துவிட்டது. இதனாலேயே இன்று அந்தக் கட்சியின்
உயர்பீடம் மற்றும்
முக்கிய பதிவிகளில்
இருப்பவர்கள் உண்மையை உரத்துச்சொல்ல முற்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் துரோகிகளாக பார்க்கப்படுகின்றனர்'
முஸ்லிம்
சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட வேண்டும்,
இழந்த காணிகள்,
பள்ளிவாயல்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்பதில்
எமது கட்சி
மிகவும் பொறுப்புடன்
நடந்து கொண்டு
வருகின்றது' என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment