பாடசாலையில் பெண் ஆசிரியருடன்
கைகுலுக்க மறுத்த முஸ்லிம் மாணவர்கள்


சுவிட்சர்லாந்தில் பெண் ஆசிரியருடன் கைகுலுக்க முஸ்லிம் மாணவர்கள் மறுத்த நிலையில் குறிப்பிட்ட பாடசாலை  எடுத்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பெஸல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்று எடுத்துள்ள முடிவு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Therwil பகுதியில் அமைந்துள்ள பாடசாலை  ஒன்றில் கல்வி பயின்று வரும் முஸ்லிம் மாணவர்கள் இருவர் பெண் ஆசிரியருடன் கைகுலுக்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அது தங்களது மத நம்பிக்கைக்கு எதிரான செயல் எனவும், தவிர்க்க முடியாத சூழலில் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் கைகுலுக்குவதில் தவறில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பாடசாலை  நிர்வாகத்தின் முடிவுக்காக கொண்டு செல்லப்பட்டதில், முஸ்லிம் மாணவர்கள் பெண் ஆசிரியருடன் கைகுலுக்க தேவை இல்லை என அறிவித்துள்ளது.
ஆனால், பாடசாலையின் கொள்கை முடிவில் தாங்கள் தலையிட முடியாது என தெரிவித்துள்ள உள்ளூர் ஆட்சிமன்றம், சட்டதிட்டங்களை வகுப்பது பாடசாலையின் முடிவு என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த விவகாரத்தில் இறுதியான முடிவை எடுக்க வேண்டும் எனவும், அது நடைமுறைக்கு ஏற்றதாக அமைய வேண்டும் எனவும் மாகாண கல்வித்துறை அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆணும் பெண்ணும் கைகுலுக்குவது இறையியல் ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒன்றே எனவும், பல இஸ்லாமிய நாடுகளில் இது நடைமுறையில் இருப்பதாகவும், சுவிஸ் நாட்டில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும், பிரச்சனையை உருவாக்கும் அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top