'பனாமா பேப்பர்ஸ்'
உலகை அதிர வைத்துள்ள நிதி மோசடி



விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
வொஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International Consortium of Investigative Journalism) ஞாயிறன்று (3) இந்த தகவல்களைபனாமா பேப்பர்ஸ்எனும் பெயரில் வெளியிட்டுள்ளது.
கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்கள் பனாமா நாட்டில் எவ்வாறு பதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்களே கசிந்துள்ளன.
மொசாக் பொன்சேகா நிதி நிறுவனம் 1977 இல் இருந்து 2015 டிசம்பர் வரையில் தங்கள் சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பனாமா நாட்டடைச் சேர்ந்த மொஸாக் பொன்செகா நிறுவனத்திலிருந்தே இந்த தகவல்கள் கசிந்துள்ளன. மொஸாக் பொன்சேகா நிறுவனமே இந்த மோசடிகளுக்குத் துணைபோய் பல தசாப்தங்களாக வரிஏய்ப்பு மற்றும் சொத்து பதுக்கல்கள் மூலமாக தமது வாடிக்கையாளர்கள் பலரது சொத்துக்களை பதுக்க உதவி புரிந்துள்ளது.சுமார் 11 மில்லியன் தகவல் தரவுகள் இதுவரையில் திரட்டப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், கால்பந்து வீரர் மெஸி, எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபி உள்ளிட்ட பல பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தமாக 140 இந்நாள் மற்றும் முன்னைநாள் அரசியற் பிரபலங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பிரச்சினை காரணமாக ஐஸ்லாந்து பிரதமர் தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டிய நிலமையும் ஏற்பட்டுள்ளது.
ஆனால்,மொசாக் ஃபொன்சேகா நிறுவனம் , தாங்கள் 40 ஆண்டுகளாக இயங்கிவருவதாகவும் ஒருபோதும் இத்தகைய மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறது.
மேலும், எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் நிதி மோசடிக்காரர்கள் அனைவரின் விபரங்கள் வெளியிடப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இந்திய பிரபலங்கள் பலரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக இந்த பட்டியலில், பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் கே.பி. சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர்  9 பேர், கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலோ டயர் புரோமோட்டர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோர் உற்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன.
மேலும், ஈரான், சிம்பாப்வே மற்றும் வட கொரியாவைச் சேர்ந்த 33 நபர்கள் அமெரிக்காவின் தடைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் ஒருவர் வட கொரியாவின் அணுவாயுத நடவடிக்கையுடன் தொடர்புடையவர் எனவும் அறியப்படுகின்றது.

OFFSHORE LINKS OF MORE THAN 140 POLITICIANS AND OFFICIALS EXPOSED
By The International Consortium of Investigative Journalists
A new investigation published today by ICIJ, the German newspaper Süddeutsche Zeitung and more than 100 other news organizations around the globe, reveals the offshore links of some of the planet’s most prominent people.
In terms of size, the Panama Papers is likely the biggest leak of inside information in history – more than 11.5 million documents – and it is equally likely to be one of the most explosive in the nature of its revelations.
The leak exposes the offshore holdings of 12 current and former world leaders and reveals how associates of Russian President Vladimir Putin secretly shuffled as much as $2 billion through banks and shadow companies.
The files contain new details about major scandals ranging from England’s most infamous gold heist, an unfolding political money laundering affair in Brazil and bribery allegations convulsing FIFA, the body that rules international soccer.
They also provide details of the hidden financial dealings of 128 other politicians and public officials around the world and show how a global industry of law firms and big banks sells financial secrecy to fraudsters and drug traffickers as well as billionaires, celebrities and sports stars.
The Panama Papers expose offshore companies controlled by the prime ministers of Iceland and Pakistan, the king of Saudi Arabia and the children of the president of Azerbaijan. They also include the names of at least 33 people and companies blacklisted by the U.S. government because of evidence that they’ve done business with Mexican drug lords, terrorist organizations like Hezbollah or rogue nations, including North Korea and Iran.
The leaked data covers nearly 40 years, from the late 1970s through the end of 2015. It allows a never-before-seen view inside the offshore world – providing a day-to-day, decade-by-decade look at how dark money flows through the global financial system, breeding crime and stripping national treasuries of tax revenues.
The leaked records – which were reviewed by a team of more than 370 journalists from nearly 80 countries – come from a little-known but powerful law firm based in Panama, Mossack Fonseca, that has branches in London, Beijing, Miami, Zurich and more than 35 other places around the globe. 
The firm is one of the world’s top creators of shell companies, corporate structures that can be used to hide ownership of assets. The law firm’s leaked internal files contain information on 214,000 offshore companies connected to people in 200 countries and territories.
The data include emails, financial spreadsheets, passports and corporate records revealing the secret owners of bank accounts and companies in 21 offshore jurisdictions, from Nevada to Hong Kong to the British Virgin Islands.
It is the largest cross-border media collaboration ever undertaken. Journalists working in more than 25 languages dug into Mossack Fonseca’s inner affairs and traced the secret dealings of the law firm’s customers around the world. They shared information and hunted down leads generated by the leaked files using corporate filings, property records, financial disclosures, court documents and interviews with money laudering experts and law-enforcement officials.
Most of the services the offshore industry provides can be used for legal purpose and are by law-abiding customers. But the documents show that banks, law firms and other offshore players often fail to follow legal requirements to make sure clients are not involved in criminal enterprises, tax dodging or political corruption. The files show that these fixers and middlemen protect themselves and their clients by concealing suspect transactions. In some instances, they work to head off official investigations by backdating and destroying documents.
The Panama Papers make it clear that major banks are big drivers behind the creation of hard-to-trace companies in the British Virgin Islands, Panama and other offshore havens. The files list more than 15,600 paper companies that banks set up for clients who wanted to keep their finances under wraps, including hundreds created by international giants UBS and HSBC.
The disclosures from the law firm’s leaked files dramatically expand on previous leaks of offshore records that ICIJ and its reporting partners have revealed in the past four years.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top