ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி ரத்து

தயா கமகே, கட்சியின் சிரேஸ்ட பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளராக கடமையாற்றிய அமைச்சர் தயா கமகே, கட்சியின் சிரேஸ்ட பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜாதிக சேவக சங்கமயவின் தலைவராக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய இளைஞர் முன்னணியின் தலைவராக காவிந்த ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்


ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய இளைஞர் முன்னணியின் தலைவராக கவிந்த ஜயவர்தனவும், அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும், நீர்பாசனம் மற்றும் விவசாயத்துறை பிரதியமைச்சரான அனோமா கமகே, லக்வனிதா முன்னணியின் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top