காபூலில் உள்ள அமெரிக்கப் பல்கலை மீது தாக்குதல்
12 பேர் பலி, பலர் காயம்
ஆப்கானிஸ்தான்
தலைநகர் காபூலில்
உள்ள அமெரிக்கப்
பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள்
நடத்திய தாக்குதலில்
12 பேர் உயிரிழந்ததாகத்
தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று
காலை தீவிரவாதிகள்
நடத்தப்பட்ட தாக்குதலில் 7 மாணவர்கள், 3
காவல் அதிகாரிகள்,
2 பாதுகாப்பு வீரர்கள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், இந்தத்
தாக்குதலில் 35 மாணவர்கள் மற்றும் 9 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
750 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பத்திரமாக
மீட்கப்பட்டுள்ளனர். தாக்குதலை அடுத்து
அங்குள்ளவர்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த
தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும்
பொறுப்பேற்கவில்லை. சம்பவ இடத்துக்கு
வந்த பொலிஸார்
விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.



0 comments:
Post a Comment