சிங்கப்பூர்
முன்னாள் ஜனாதிபதி
எஸ்.ஆர். நாதன்
காலமானார்
சிங்கப்பூர்
முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன்
உடல்நலக் குறைவால்
நேற்று இரவு சிங்கப்பூர் வைத்தியசாலையில் 9.48
மணிக்கு (Singapore General Hospital at
9.48pm) காலமானார். அவர் சிங்கப்பூரின்
நீண்ட நாள்
ஜனாதிபதியாக பதவி வகித்த
பெருமை உடையவர்.
92 வயதான
அவர் கடந்த
ஜூலை 31 ம்
திகதி பக்கவாத
நோயின் காரணமாக
சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர்
நேற்று இரவு
காலமானார்.
அவரது
மறைவிற்கு சிங்கப்பூர்
பிரதமர் லி
சைன் லுாங்,
ஜனாதிபதி டோனி
டான் யாம்
உட்பட பலரும்
இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது
உடலுக்கு பொதுமக்கள்
அஞ்சலி செலுத்த
சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் ஏற்பாடுகளை செய்து
வருகிறது.
எஸ்.
ஆர். நாதன்
1999 ல் சிங்கப்பூரின்
ஆறாவது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். 2011 ம்
ஆண்டு வரை
12 ஆண்டுகள் ஜனாதிபதி பதவி வகித்தார்.
சிங்கப்பூர்
தமிழரான அவர்
1924 ஆம் ஆண்டு
ஜூலை 3 ம்
திகதி பிறந்தார்.
சிங்கப்பூர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி
பெற்று 1955 ல் மருத்துவ சமூக அதிகாரியாக
பணியில் சேர்ந்தார்.
பின்னர்
வெளியுறவுத் துறை செயலாளர்ர், பாதுகாப்பு
மற்றும் நுண்ணறிவுப்பிரிவு
இயக்குநர், அமெரிக்காவிற்கான சிங்கப்பூர்
துாதர் என
படிப்படியாக பல முக்கிய பதவிகளில் வகித்து
இறுதியில் சிங்கப்பூர்
ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.