வெளிவாரிப் பட்டப்படிப்புகளுக்காக
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன




இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்புகளுக்காக தமிழ்மொழி மூல வெளிவாரி மாணவர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கலைமானி (பொது), வியாபார நிர்வாகமானி (பொது) மற்றும் வர்த்தகமானி (பொது) ஆகிய கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேற்படி பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர்தெரிவித்துள்ளார்.
கலைமானி பட்டப்படிப்புக்கான தகைமைகள்:-
 .பொ. உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் அங்கிகரிப்பட்ட 03 பாடங்களில் (2015 ஆண்டு அல்லது அதற்கு முந்திய) சித்திகளும் சாதாரணதரப் பரீட்சையில் குறைந்தபட்சம் 30 சதவீதப் புள்ளிகளை அல்லது காலத்துக்குக்காலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நிர்ணயிக்கப்படும் புள்ளிகளைப் பெற்றிருக்கவேண்டும். மேலும், விண்ணப்பதாரிகளைத் தெரிவுசெய்கையில் வருடம் தோறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்படப்படும் இஸட் புள்ளிகள் கருத்திற்கொள்ளபடும். அல்லது, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதவையால் அங்கிகரிக்கப்படும்.
 ஏனைய தகைமைகள்.
வியாபார நிர்வாகமானி மற்றும் வர்த்தகமானி பட்டடப்படிப்புக்கான கல்வித் தகைமைகளாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்திகளும்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் இஸட் புள்ளிகள் கருத்திற் கொள்ளப்படும். அல்லது அரசங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட நிர்வணத்தால் வழங்கப்படும் கணக்கியல் உயர் கல்வி டிப்ளோமா அல்லது முகாமைத்துவ
உயர் கல்வி தேசிய டிப்ளோமா. அல்லது இலங்கை தொழில்நுட்ப கல்லூரியால் வழங்கப்படும் வணிகத்தில் கணக்கு பதிவாளர்களுக்கான உயர் சான்றிதழ் என்பவற்றை கொண்டிருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் உதவிப் பதிவாளர், வெளிவாரிப் பட்டப்படிப்பு மற்றும் தொழிசார் கற்கைகளுக்கான நிலையம், தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
மேலதிக தகவல்களை பல்கலைக்கழக. www.seu.ac.lk  இணையத்தளத்திற்குச் சென்று பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top